Header Ads



முஸ்லிம்கள் முரண்­பா­டு­க­ளுக்கு, முக்­கி­யத்தும் வழங்குவது கவ­லைக்­கு­ரி­ய­து - ரிஸ்வி முப்தி


முஸ்லிம் சமூ­கத்தை கொள்கை முரண்­பா­டுள்­ள­வர்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­னாலும் ஒருவர் தனது கொள்­கை­களை இன்­னொ­ருவர் மீது திணிப்­ப­தற்கு முயற்­சிக்கக் கூடாது. எமது எதிர்­காலம் ஒற்­று­மை­யிலே தங்­கி­யுள்­ளது.

இன்று ஒரு­வரை ஒருவர் மதிக்­கா­மை­யி­னாலே பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

நாட்டின் சில பகு­தி­களில் முஸ்­லிம்கள் கொள்கை ரீதியில் முரண்­பட்டு அசம்­பா­வி­தங்கள் ஏற்­ப­டு­கின்­றமை தொடர்பில் வின­வி­ய­போதே உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி இவ்­வாறு பதி­ல­ளித்தார். அவர் தொடர்ந்து விளக்­க­ம­ளிக்­கையில்,

 முஸ்லிம் சமூகம் அண்­மைக்­கா­லத்தில் கொள்கை முரண்­பா­டு­க­ளுக்கு முக்­கி­யத்தும் அளித்து செயற்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எமது ஒற்­று­மை­யிலே சமு­தா­யத்தின் வளர்ச்­சியும் முன்­னேற்­றமும் தங்­கி­யுள்­ளது.

எமது ஒற்­று­மைக்கு விட்டுக் கொடுப்பும் பணிந்து நடக்கும் தன்­மையும் ஒரு­வரை மதிக்கும் மனப்­பான்­மையும் அவ­சி­ய­மாகும். 

எமக்குள் கொள்கை முரண்­பா­டு­க­ளினால் பிரச்­சி­னைகள் ஏற்­பட்டால் அந்தப் பிரச்­சி­னை­களை கலந்­து­ரை­யாடல் மூலம் நாம் தீர்த்துக் கொள்ள வேண்டும். கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளாமல் மோதல்­களில் ஈடு­ப­டு­வது தவ­றா­ன­தாகும். அமர்ந்து கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­வதன் மூலம் எமக்­கி­டை­யி­லான மோதல்­களைத் தவிர்த்துக்  கொள்ள முடியும். 

இன்று எமது சமூ­கத்தில் பொது­வான கலந்­து­ரை­யா­டல்கள் இல்­லாமற் போயுள்­ளது. கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் பிரச்­சி­னைகள் தீர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும் என குர்­ஆ­னிலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இஸ்­லாத்தில் அடி­மை­க­ளுக்குக் கூட உரி­மைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் நாம் அனை­வரும் சம­மா­ன­வர்கள். எமக்குள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறு­பாடு இல்லை. 

பல்­லின சமூ­கத்தில் வாழும் நாம் எமது கருத்து சரி என்று வாதிக்கும் நிலையில் முஸ்லிம் அல்­லாதோர் தமது கருத்தே சரி­யென்று வாதிக்­கி­றார்கள்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் நாம் முரண்­பட்டுக் கொண்டு முறுகல் நிலை­களை வளர்த்துக் கொள்­வது தவிர்க்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான நிலை­மை­களின் போது கலந்­து­ரை­யா­டல்­களே எமக்குள் ஒற்­று­மை­யையும் சமா­தா­னத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் எமது மார்க்கம் தொடர்பாக ஏனைய சமூகங்கள் கொண்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சவூதி அரேபியாவில் மாநாடுகள் கூட நடத்தப்படுகின்றன என்றார்.

விடிவெள்ளி ARA.Fareel 

1 comment:

  1. We are the unthankful people.if problem comes example bbs halal hijab we are started to pray fasting dua ect .allah solve the problems then we started to forgot the past.and behave like hero.

    ReplyDelete

Powered by Blogger.