Header Ads



பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில், பகிரங்கமாக நடந்த திலீபன் நினைவு நிகழ்வுகள்

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து  உயிர் துறந்த லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றன.

யாழ். நல்லூரில் அமைந்துள்ள  திலீபன் நினைவிடத்தில், நேற்றுக்காலை அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் இங்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்திலும், திலீபனுக்கு உணர்வுபூர்வமாக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகள் பகிரங்கமாக இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. தமிழ்ப் பயங்கரவாதிகளின் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை.

    ஹி ஹி

    ReplyDelete
  2. தியாகி திலீபனின் தியாகத்தை மதிப்பதோடு அவரது பிரிவால் துயருறும் அவரது பெற்றோர், உறவினர், நலன் விரும்பிகள், தமிழ் மக்களின் நியாயமான உரிமைக்காக போராடிய, ஆதரவு நல்கிய, இந்த தியாகியை கண்ணியப்படுத்திய அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்த சந்தர்ப்பத்தில் சில விடயங்களை பதிவிட விரும்புகிறோம்.
    இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விரும்பாத LTTE தலைமை, 5 அம்ச கோரிக்கையை முன் வைத்து திலீபனை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க செய்தது. திலீபனின் உயிரை காப்பாற்றுவதட்காக அவர் இறப்பதட்கு இரண்டு, மூன்று திணைகளுக்கு முன்பு டிக்சிட் அவர்கள் பிரபாகனை சந்தித்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் பிரபாகனால் 5 அம்ச கோரிக்கை ( தீர்ப்பதட்கு நீண்ட காலம் எடுக்கக் கூடிய கோரிக்கைகள்) நிறைவேற்றும் வரைக்கும் திலீபனின் உண்ணாவிரத்தத்ததை தன்னால் நிறுத்த முடியாது என்று கூறிவிட்டார். ஆக திலீபன் சுயவிருப்பத்தின் பேரில் செத்தாரா?? அல்லது திட்டமிட்டு சாகடிக்கப்பட்டாரா?? 1984 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த மதிவதானியையும் ( இவர் பேராதெனிய விவசாய பீடத்துக்கு அனுமதி பெற்றவர், பின் இவரை பிரபாகரன் தனது மனைவி ஆக்கிக் கொண்டார்) அவரது நண்பிகளை கடத்தி சென்ற பிரபாகரன் ஏன் திலீபனை சாக விட்டார்??

    நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக நடக்க நாம் முயறசிக்க வேண்டும். வடகிழக்கு இணைப்பை தூக்கி பிடித்து கொண்டு முஸ்லிம்களும் தமிழர்களும் முட்டி மோதுவதை நிறுத்திக் கொண்டு, இந்த இரு மாகாண சபைகளுக்கு தேவையான அதிகூடிய அதிகாரத்தை பெற்று கொள்வதட்கு இருதரப்பாரும் ஒற்றுமையாக செயட்பட வேண்டும். அதுதான் புத்தி சாதுரியமான விடயமாகும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லகதை சுவாரஸ்யம் பத்தாது.Good try

      Delete
    2. நடந்தவை நடந்தவையிக இருக்கட்டும்.வடகிழக்கு எதிர்ப்பு கோசத்தை தூக்கி எறிந்து விட்டு இணைந்த வடகிழக்கில் அதிகூடியஅதிகாரம் பெற்று கெண்டு வாழ்வவோம்.

      Delete
  3. ஒருபோதும் அது இணையாது.

    ReplyDelete
  4. அப்படிச் சொல்லுங்க,நீங்களும் நன்றாக விளங்கி கொள்ளுங்க நம்ம நாடு இப்ப முன்ன மாதிரி இல்லை அவனுகளுக்கும் இனவெறி இப்ப நல்லா பகிரங்கமாக ஊட்டப்படுகுது அதனால அவனுகளும் வரிந்து கட்டி கொன்டு நிக்கின்றார்கள்.வடக்கும் கிழக்கும் இணைக்கும் விசயம் அது நடக்காத விசயம் அதனால் அது அப்படியே இருக்கிற மாதிரி இருக்க உரிமையை பெற்று கொள்ள முயற்சி செய்வோம் அது எங்களுக்கு இலகுவாக இருக்கும்.ஆட்சியை கிடைக்கிற மாதிரி செய்து கொள்வோம்.இன்னொரு முக்கிய விடயம் அது உங்களுக்கு தெரியாத விசயமும் இல்லை அது என்ன வென்றால் வடக்கானும் கிழக்கானும் ஒரு காலமும் இனையவே மாட்டான் உங்களுக்குள் இருக்கும் சாதி வேற்றுமை,,,,,,அடி போங்கள்

    ReplyDelete
  5. @ Kumaran.. நல்ல கற்பனை... ஆயுதம் தாங்கி பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீல கனவை , அதி கூடிய அதிகாரம் பெறலாம் என்று ஆசைகாட்டி அடையப்போகின்றீர்களா?
    Hi hi hi...
    வேறு ஒரு காமன்டில் நீங்கள் தன்மானத்தை இன்னும் இழக்காதவர்கள் என்றீர்களே!! அப்போ ஏன் பிச்சை கேற்கிறீர்கள்? மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடலாமே!!!

    ReplyDelete
    Replies
    1. உன்னிடம் பிச்சை எடுக்க கிழக்கு உனதா.?கிழக்கு எம்தாயகம்.

      Delete
  6. அதனால்தான் சொல்கிறேன் சிங்களவர்களிடம் பிச்சை கேட்காமல் உங்கள் தாயகத்தை பறித்து எடுங்கள் ( கனவில் )

    ReplyDelete

Powered by Blogger.