Header Ads



லசந்தவின் சடலத்தை தோண்டும்போது, பறந்த ட்ரோன் கமெரா - பொலிஸார் ஓடியும் பிடிக்கவில்லை


படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை (27) தோண்டியெடுக்கப்பட்டது. 

அங்கு செய்திகளை சேகரிப்பதற்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை மயானத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை. இதனால், கம்பிகளுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். 

இந்நிலையில், கனத்தை மாயனத்துக்குள் ட்ரோன் கமெரா சுற்றிதிரிந்தமையால், பொலிஸார் கலவரம் அடைந்தனர். வானிலிருந்து படம்பிடித்த அந்தக் கமெராவைப் பிடிப்பதற்குப் பொலிஸாரினால் முடியவில்லை. எனினும், கனத்தை மயானத்தின் பாதுகாப்பு வேலிகளுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கிப் பொலிஸார் ஓடிவந்தபோதிலும், ட்ரோன் கமெராவின் உரிமையாளரைப் பொலிஸாரினால் தேடிப்பிடிக்கமுடியவில்லை.

No comments

Powered by Blogger.