Header Ads



வரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு

இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார்.

அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

அதற்கமைய சாட்சியாளரான ஜனாதிபதியிடம் குறுக்கு கேள்விகள் கேட்பதற்கு இரண்டு தரப்பு வழக்கறிஞர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. போலி சாட்சி வழங்கினால் தண்டனை அனுபவிப்பதற்கும், பொதுவான சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் கொடுக்கவுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் பிரதமர் இந்த வழக்கின் சாட்சியாளராக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

9 comments:

  1. This is a trait in five star democracy . This could
    work as a warning to wrong doers but also could be
    taken for a joke by rogue politicians . In either
    case , leading by example is what leadership is all
    about . Good .

    ReplyDelete
  2. முழு உலகத்திற்கும் ஒரு முன் மாதிரி தான் சபாஷ்

    ReplyDelete
  3. HE is true to his word. though he is eligible for immunity he has taken the correct decision to act as an ordinary citizen equal in the eyes of law

    ReplyDelete
  4. எல்லாம் அரசியல் நாடகம்... பரீட்சையில் முன்கூட்டியே Pass என்று சான்றிதழ் வழங்கினால் யார்தான் பரீட்சைக்குப்போக பயப்படுவார்கள்..
    Do not trust any Politcian!

    ReplyDelete
  5. SATTAM ELLORUKKUM ONDRU.ENPATAI ULAHUKKU EDUTTU KATTU.WELDON PRESIDENT MAITHREE.

    ReplyDelete
  6. நடப்பதெல்லாம் (நாளை........) நாடாளவேண்டியவர்களின் நன்மைக்கே.,

    ReplyDelete

Powered by Blogger.