Header Ads



மைத்திரிக்கு உதவிய நிறுவனம், அவரது இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலை வழங்குகிறது


ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது.

"இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த இணைய கம்பனிகளில் ஒன்றான எமது நிறுவனம் என்ற அடிப்படையில் அந்த இளைஞனை உடனடியாக விடுவித்து நல்லதொரு பாதைக்கு இட்டுச்செல்ல வழியமைத்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Many young chaps will try to hack the presidents website from now on.....

    ReplyDelete
  2. What sbout the intelligent officers who were striving day and night to find out culprits?

    ReplyDelete
  3. it will be the bad example.

    ReplyDelete

Powered by Blogger.