Header Ads



கல்முனை ஸாஹிரா கல்லூரி AM முஹம்மட் சவ்பாத்தின், அபார கண்டுபிடிப்பு (படங்கள்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ,எம், முஹம்மட் சவ்பாத் என்ற மாணவன் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய இரசாயன விசிறல் இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்.

இம் மாணவன் சூழலுக்கு கழிவாக வீசப்படும் பொருட்களைப் பயன்படுத்தி இதனை கண்டு பிடித்துள்ளதுடன், இதனை உத்தியோகபுர்வமாக அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் இன்று ( 31 ) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது,

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் பீ,எம்.எம்.பதுறுதீன் , பகுதித் தலைவர் ஏ,ஆதம்பாவா , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , தொழில்நுட்ப பிரிவு ஆசிரியை எஸ்.கஜேந்தினி உள்ளிட்ட ஆசிரியர்கள் . மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இம்மாணவன் கடந்த வருடம் கண்டு பிடித்த குறைந்த மின்சாரத்தில் இயங்கும் மாவரிக்கும் இயந்திரம் பிரபலம் பெற்று இலங்கை கண்டு பிடிப்பாளர் ஆணைக்குழுவால் பரிசில்களும் சான்றிதழும் வழங்கி பாராட்டப்பட்டார்.

எதிர்காலத்தில் இப் பிரதேசத்தில் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையும் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி பல புதிய கண்டு பிடிப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு உற்பத்திச் செலவு குறைவானதாகவும் , பாரம் குறைவானதாகவும், குறைந்த நேரத்தில் அதிக பரப்புள்ள பயிர் நிலங்களுக்கு விசிறல் செய்ய முடிவதோடு இதனை இயக்குவதற்கு எரிபொருள் அவசியமில்லை சூரிய சக்தியே போதுமானது.

தனது கண்டு பிடிப்பை சந்தைப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்தால் இதன் மூலும் கூடிய வருமானத்தைப் பெற முடியுமென இம் மாணவன் தெரித்தார்.

இம்மாணவன் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி ஒழுங்கு செய்திருந்த தேசிய மட்ட புத்தாக்க போட்டி , இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான போட்டி . இலங்கை பொறியிலாளர் நிறுவுகத்தால் நடத்தப்பட்ட போட்டி . சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தால் பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கப்பட்டமை . தேசிய இளைஞர் கழகத்தினால் நடத்தப்பட்ட “ The tellent ‘ என்ற போட்டியில் வெற்றி பெற்றமை தனக்கு கிடைத்த பெருமையாகவும் , தனது இம் முயற்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் .கல்லூரி அதிபர் பீ,எம்.எம்.பதுறுதீன் , பகுதித் தலைவர் ஏ,ஆதம்பாவா ,வகுப்பாசிரியை திருமதி எஸ்.கஜேந்தினி , ஊடகங்கள் மூலும் தனது கண்டு பிடிப்புகளை பிரபலப்படுத்த உதவிய சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ,எம்.அஸ்ஹர் , தன்னை பல வழிகளிலும் ஊக்குவிக்கும் தனது பெற்றோருக்கும் சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக இம் மாணவன் மேலும் தெரிவித்தார்.
A.S.M.SAFRIN



1 comment:

Powered by Blogger.