Header Ads



மருத்துவ சிகிச்சையின்றி குழந்தை, பிரசவித்த தாய் 8 நாட்களின் பின்னர் வபாத்

-விடிவெள்ளி-

 மருத்­துவ சிகிச்­சையோ அல்­லது மாதாந்த மருத்­துவ பரி­சோ­த­னைகளோ இன்றி குழந்தை பிர­சவம் இடம்­பெற்ற எட்டு நாளின் பின்னர் தாய் உயி­ரி­ழந்த சம்­பவம் கல்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பூலாச்­சேனை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த நான்கு பிள்­ளை­களின் தாயே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

உயி­ரி­ழந்த பெண் ஏற்­க­னவே மூன்று பிள்­ளை­களைப் பிர­ச­வித்­துள்­ள­தோடு அப்­பிள்­ளை­களின் பிர­ச­வத்தின் போதும் எவ்­வித மருத்­துவ சிகிச்­சையோ அல்­லது மாதாந்த மருத்­துவ பரி­சோ­த­னை­களோ மேற்­கொள்­ளப்­ப­டாது அந்த மூன்று பிள்­ளை­க­ளி­னதும் பிர­ச­வத்­தையும் உயி­ரி­ழந்த பெண்ணின் கண­வரே அவர்­க­ளது வீட்டில் வைத்தே மேற்­கொண்­டுள்­ள­மையும்,  இந்த நான்­கா­வது ஆண் குழந்தைப் பிர­ச­வத்தின் பின்னர் தொப்புள் கொடி­யி­னையும் இப்­பெண்ணின் கண­வரே கத்­தி­ரி­யினால் வெட்­டி­யுள்­ள­மையும், பிர­ச­வத்தின் பின்­னரும் தாயும் குழந்­தையும் எவ்­வித மருத்­துவ சிகிச்­சைக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பதும் மரண விசா­ர­ணையின் போது தெரிய வந்­த­தாக புத்­தளம் மற்றும் கல்­பிட்டி பிரிவின் திடீர் மரண விசா­ரணை அதி­காரி பீ. எம். ஹிசாம் தெரி­வித்தார். 

குழந்தை பிர­சவம் இடம்­பெற்று எட்டு நாளின் பின்னர் கடந்த சனிக்­கி­ழமை அத்தாய் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும்,  பின்னர் தனது மனைவின் ஜனா­சாவை அடக்கம் செய்­வ­தற்கு சகல ஏற்­பா­டு­க­ளையும் பூர்த்தி செய்த நிலையில் இதனை அவ­தா­னித்த சிலர் இது பற்றி பொலிஸ் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­திற்கு அறி­வித்­ததால் அங்கு சென்ற கல்­பிட்டி பொலிஸார் ஜனா­சாவை மீட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமை­வாக பிரேத பரி­சோ­த­னைக்­காக குரு­நாகல் வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச்  சென்­ற­தா­கவும் திடீர் மரண விசா­ரணை அதி­காரி மேலும் தெரி­வித்தார்.

பிரேத பரி­சோ­தனையின் முடிவில் பிர­ச­வத்தின் பின்னர் உடல் முழு­வதும் கிருமி தாக்கம் ஏற்­பட்­டதால் இடம்­பெற்ற மரணம் எனத் தீர்ப்­ப­ளித்து ஜனா­சாவை கண­வ­ரிடம் ஒப்­ப­டைத்­தா­கவும் திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஹிசாம் தெரிவித்தார். 

கல்பிட்டி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

5 comments:

  1. இப்படியான மடத்தனமான ஒரு செயலை ஒரு சில அரப்படித்த இஸ்லாமிய அமைப்புக்கள் ஊக்குவித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது. தனது மனைவியையோ, பெண் பில்லைகலியோ நோய் வந்தால் கூட வைத்தியரிடம் அழைத்துச் செல்லாமல், அல்லாஹ் குனமாக்குவான் என்று வீட்டில் மறைத்து வைத்திருப்பதும், பிரசவங்களை கணவன் மட்டும் வீட்டில் பார்ப்பதும் இன்று ஓரளவுக்கு இரகசியமாக ஊக்குவிக்கப் படுகின்றது. இதற்கு எதிரான பாரிய விழிப்புணர்வு அவசியமாகும். இஸ்லாம் இஸ்லாம் என்று கற்காலத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றார்கள், இந்த நூற்றாண்டிலும்.

    ReplyDelete
    Replies
    1. r u sure that all other child birth r safe?

      Delete
  2. கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவான :ஜெகோவாவின் சாட்சிகள்" அமைப்பினரிடமும் இதுபோன்ற பிற்போக்குச் சிந்தனைகள் காணப்படுகின்றன.

    இந்து போன்ற மடத்தனங்கள் கட்டாயம் களையப்படல் வேண்டும். தந்தை மதத்தை மடத்தனமாக விளங்கி செய்யும் தவறுகளால் பாதுக்கப்படுவது பெண்ணும், அவள் குழந்தைகளும் ஆகும்.

    முகமது நபியாக இருந்தாலும், அவரது எல்லா செயல்களையும் காலத்தைக் கடந்து காபன் கொப்பி பண்ண முயல்வது அறிவுக்குப் பொருத்தமில்லை. அவரது வாழ்க்கை அவரது காலத்தின் படி இருந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    சிவனும், பார்வதியும் வாழ்ந்த வாழ்க்கையைத்தான் நாமும் வாழ்வோம், அவர்கள் போன்றுதான் உடை அணிவோம் என்று இந்துக்கள் புறப்பட்டால் அது எவ்வளவு மடத்தனமாக இருக்குமோ, அதே போன்றுதான் முஸ்லிம்களில் சிலர் செய்யும் செயல்களும் அமைந்து இருக்கின்றன.

    ReplyDelete
  3. Foolish act. the husband should be charged for negligence and withholding proper medical care during and after pregnancy.

    ReplyDelete
  4. If a family (husband & wife) mutually agree not to seek medical advice or treatment from an outsourcer, then it's up to them.
    You people can't exaggerate it as foolish or senseless. Here in this incident, the family seem to get help from Allah and eventually they accept the will of Allah.

    ReplyDelete

Powered by Blogger.