Header Ads



உலகின் வயதான கிளி 83 வயதில் இறந்தது


கூண்டில் வைக்கப்பட்ட மிக வயதான பறவை இனவகையாக கருதப்படும் கொக்காட்டு கிளி இனம் ஒன்று 83 வயதில் இறந்துள்ளது.

அமெரிக்காவின் சிக்காகோ மிருகக் காட்சிசாலையில் பெரிதும் அறியப்பட்டு வந்த இந்த கிளியின் உடல் நிலை மோசமானதை அடுத்து இறந்துவிட்டதாக மீருகக் காட்சிசாலை அதிகாரிகள் கடந்த திங்களன்று அறிவித்துள்ளனர்.

வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட இந்த கிளி பிரூக்பீல்ட் மிருகக்காட்சிசாலை திறக்கப்பட்டபோது கொண்டுவரப்பட்டு கடைசியாக உயிர்வாழ்ந்ததாகவும் இருந்தது. கொக்காட்டு கிளி 1934ஆம் ஆண்டு ஒரு வயது இருக்கும்போது அவுஸ்திரேலியாவில் இருந்து இந்த மிருகக் காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 இந்த கிளியும் வயது முதிர்ச்சியால் மனிதர்கள் சந்திப்பது போன்ற உடல் உபாதைகளை சந்தித்து வந்ததாக மிருகக் காட்சிசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் மற்றும் கண்புரை நோய் போன்ற பாதிப்புகளுக்கு இந்த கிளி முகம்கொடுத்து வந்துள்ளது. 

1 comment:

  1. Cockatoo's life span is around 70 years. This one has lived more than that.
    Imagine how many care takers he would have had ?
    இதை செல்லப்பிராணியாக வளர்த்தால் பொதுவாக இதற்கு முன் இதன் எஜமானியே டிக்கட் வாங்கி பரலோகம் கோவார்.
    ஆகவே செல்லப்பிராணிய இழந்த துண்பம் எஜமானுக்கு வர வாய்ப்பிருக்காது.
    Consider having one ?

    ReplyDelete

Powered by Blogger.