Header Ads



மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில், இலங்கைக்கு 5 ஆவது இடம்

கடல்வளத்தை மாசுபடுத்தும் முதற்தர நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தை வகிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 0.0.3 வீதத்தில் சுற்றாடல் அழிவடைந்து வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் துறையை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்தால் மாத்திரம் இந்நாட்டில் அழிவை எதிர்கொண்டு வரும் சுற்றாடல் அழிவை தடுக்க முடியாது என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே சுற்றாடலை பாதுகாப்பதற்கு நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேராதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு 3 வினாடிக்கும் உலகில் எங்கோ ஒரு நாட்டில் சுற்றாடல் ரகர் விளையாட்டு மைதானத்தின் அளவிற்கு அழிவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதது.

No comments

Powered by Blogger.