கணவரின் ஒத்துழைப்புடன் 4 வருடங்களாக, ஆண்களை ஏமாற்றிய விசித்திரப் பெண் கைது
ஆண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை தனது வலையில் வீழ்த்துவதன் மூலம் அவர்களின் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட பெண்ணொருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண்ணை மீரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் தனது கணவரின் ஒத்துழைப்புடன் கடந்த நான்கு வருடங்களாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண் முதலில் ஆண்களுடன் நட்பு ரீதியில் பழகி, ஆண்களை ஏமாற்றி அவர்களுக்கு ஒரு வகை மருந்தை வழங்குவதாகவும், அந்த மருந்தின் ஊடாக புது வகை சக்தியொன்று ஏற்படும் எனவும் பொலிஸாரிடம் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த மருந்தை உட்கொண்டதன் பின்னர் ஆண்களுக்கு நித்திரை ஏற்படும் என அந்த பெண் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு ஆண்கள் நித்திரை கொண்டதன் பின்னர் அவர்களிடமுள்ள பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிட்டம்புவ பகுதியிலுள்ள உணவகமொன்றில் அவர் ஆண்ணொருவருடன் கதைத்துக் கொண்டிருந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த காணொளிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மீரிகம ஹகுருகும்ர பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணினால் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் பெறுமதி மிக்க பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment