அரசிற்கு ரூபா 45 மில்லியன் நஷ்டம் - 2 பேருக்கு சர்வதேச பொலிஸாரின் பிடியாணை
ஹலோ கோப் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன்ட் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அரசிற்கு ரூபா 45 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் நாமல் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு இன்று (01) எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த வழக்கின் 6 சந்தேகநபர்களில், இந்திக கருணாஜீவ மற்றும் இரேஷா சில்வா ஆகிய இருவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால் அவர்களுக்கு எதிராக மீண்டும், சர்வதேச பொலிஸாரின் பிடியாணை வழங்கப்பட்டது.
இதனை அடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ, குறித்த நிறுவனங்களில் பணிப்பாளராகவும் விமான சேவை ஊழியராகவும் கடமையாற்றிய நித்யா சேனானி சமரநாயக்க, மற்றுமொரு பணிப்பாளரான சுஜானி போகொல்லாகம மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய நான்கு சந்தேகநபர்களுக்கும் பாரிய நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment