அயோத்தி மசூதி நிலம் மீட்பு - 300 ஆண்டுகால வரலாற்றில் முத்தான முன்னேற்றம்
அவுரங்கசீப் ஆட்சியில், அயோத்தியில் 1765-ம் ஆண்டு கட்டப்பட்ட 'ஆலம்கீரி' என்ற பெயர் கொண்ட பள்ளிவாசல், 'ஹனுமான்கரி' கோவில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் 'அர்கரா' என்னுமிடத்தில் ஆலம்கீரி பள்ளிவாசல் செயல்பட்டு வந்த நிலையில், அன்றைய ஹிந்து சாமியார்களின் வேண்டுகோளுக்கு இனங்க, அயோத்தியை ஆண்டுக்கொண்டிருந்த அன்றைய நவாப் 'சுஜாவுல்லாஹ்' ஆலம்கீரி பள்ளி வளாகத்தை ஒட்டியுள்ள நிலத்தை 'ஹனுமான்கிரி' கோவிலுக்கு தானமாக வழங்கினார்.
எனினும், அங்கு ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆலம்கிரி பள்ளிவாசலுக்கு எந்த சேதமும் இல்லாமலும், பள்ளிவாசலுக்கு இடையூறு இல்லாமலும் நடந்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார், நவாப் சுஜாவுல்லாஹ்.
நவாப் சுஜாவுல்லாஹ், கோவிலுக்கு வழங்கிய நிலத்தின் தானப்பத்திரத்தில் ஆலம்கிரி பள்ளிவாசல் விஷயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும், சில வீனர்கள் மேற்படி ஆலம்கிரி பள்ளிவாசலையும் சேர்த்து ஆக்கிரமித்துக் கொண்டனர்.
கடந்த 24 வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட 'பாபர் மசூதி' விவகாரம் போலவே இந்த ஆலம்கிரி பள்ளிவாசல் பிரச்சினையும் இழுத்துக்கொண்டே இருந்தது.
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் அயோத்தி நகராட்சியின் சார்பில், முஸ்லிம்கள் யாரும் இதற்குள் பிரவேசிக்கக் கூடாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதையடுத்து ஒன்று சேர்ந்த உள்ளூர் முஸ்லிம்கள், சங்கராச்சியார் 'மஹன் கயான் தாஸ்' உள்ளிட்ட கோவில் நிர்வாகிகளை சந்தித்து மசூதி நிலம் குறித்து உரிமை கொண்டாடினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பாழடைந்த நிலையில், ஹனுமான் கோவில் பிடியில் இருந்த ஆலம்கீரி பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் ஒப்படைத்துவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுவிஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்துக்கொண்ட மஹன் கயான் தாஸ் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகளுக்கு முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கோவில் நிர்வாகத்தின் தரப்பில், பள்ளிவாசலை ஒப்படைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தங்கள் சிலவிலேயே கட்டிக் கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்கள் இனி தங்கு தடையின்றி இங்கு தொழுகை நடத்திக் கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ALHAMDHULILLAH...
ReplyDelete