300 கோடி கறுப்புப்பணம் பறிமுதல், கடத்தலில் பெண்கள் பங்கேற்பு - CID விசாரணை ஆரம்பம்
இலங்கையிலிருந்து பெருந்தொகை பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்தும் பெண்கள் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
முறையற்ற ரீதியில் பெற்றுக்கொண்ட கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கும் நடவடிக்கைக்கு இந்தப் பெண்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுங்க பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இந்த தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான பணம் வெளிநாடுகளுக்கு கடத்த முற்பட்ட வேளையில், சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
25 பெண்களிடம் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கு மேலதிகமாக அபராதம் பணமாக 35 மில்லியன் ரூபாவை சுங்க அதிகாரிகள் வருமானமாக பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் மற்றும் டுபாய் போன்ற நாடுகளுக்கு இந்த பணம் கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறான நடைமுறையின் கீழ் பல்லாயிரக்கணக்கான மில்லியன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment