Header Ads



மலேசியாவிலிருந்து மஹிந்த வெளியேற, வேண்டுமென வலியுறுத்தி 2 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்


மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, மலேசியாவில் நேற்று இரண்டாவது நாளாகவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தின் முன்பாக, 50இற்கும் அதிகமான தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள மகிந்த ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடுத்து வந்த மகிந்த ராஜபக்சவின் உருவபொம்மைகளை வீதியில் போட்டு எரித்து  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நேற்றுமுன்தினமும், கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தின் முன்பாக, பெருமளவு தமிழர்கள், போர்க்குற்றவாளி  மகிந்தவை, மலேசியாவை விட்டு வெளியேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இவ்வாறான ஒரு நிலை இருக்கும் போது விருந்தினராக அழிப்பது மலேசிய அரசாங்கத்தின் தவறுதான்.எந்த நாட்டு பிரஜையாக இருந்தாலும் விசா கொடுக்காமல் இருந்து இருக்க வேண்டும்.அல்லது ஒழுங்கான பாதுகாப்பும் பிரச்சினை வராமல் பார்த்து இருக்க வேண்டும்.அதேவேளை நாடு கடந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் இவ்வாறான பிரச்சினைகளால் உண்மையாக இலங்கையில் வசிக்கும் அப்பாவி தமிழ் மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றார்கள்.தமிழ் மக்களுக்கு எதை செய்வதாக இருந்தாலும் இலங்கை அரசாங்கம்தான் செய்ய வேண்டும்.வெளியில் இருந்து கூக்குரல் இடுபவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.