2 மரண தண்டனைக் கைதிகள் இணைந்தார்களா..?
பாரத கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவும் கடந்த சில காலங்களாக கோபமாக இருந்தார்கள் என செய்தி வெளியாகியிருந்தன.
இதனால் சிறைச்சாலையினுள் இருவரும் மோதல் ஏற்படுத்தி கொள்ளப்படும் அச்சம் சிறைச்சாலை அதிகாரிகளிடையே காணப்பட்டன. இந்த நிலையில் குறித்த இருவரும் சிறைச்சாலையினுள் சந்தித்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் மிகவும் நட்புடன் செயற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. துமிந்த பீ-3 அறையிலும் வெலே சுாதா சீ-3 அறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் பலமான இரண்டு கும்பலைச் சேர்ந்த தலைவர்களும் சந்தித்துக் கொண்டமை, எதிர்காலத்தில் எவ்வாறான விபரீதங்களை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளதாக தெரிய வருகிறது.
போதைப்பொருள் கடத்தலில் பலமான இரண்டு கும்பலைச் சேர்ந்த தலைவர்களும் சந்தித்துக் கொண்டமை, எதிர்காலத்தில் எவ்வாறான விபரீதங்களை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளதாக தெரிய வருகிறது.இந்த வீண் பிரச்னை ஏன்? இந்த இரண்டு மரணதண்டனைக்குரியர்களை உடனடியாக வெட்டிக் கொலை செய்ய அனுமதிக்குமாறு சிவில் மற்றும் ஏனைய மக்கள் பணிமனைகள் உச்சக்கட்ட நடவடிக்கைகள் மூலமாக ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டும். இது ஒன்று தான் தீர்வு.
ReplyDelete