கல்ஹின்னை பள்ளிவாசல்கள், தக்கியாக்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு
-விடிவெள்ளி ARA.Fareel-
கல்ஹின்னையில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இரு தரப்பு மோதல்களையடுத்து பள்ளிவாசலொன்றும் பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள முஸ்லிம் ஒருவரின் வீடும் தாக்கப்பட்டுள்ளமையினால் கல்ஹின்னை மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
கல்ஹின்னை தெப்பிலகொல்ல பள்ளிவாசல் இனந் தெரியாத கும்பலினால் வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கும் 10மணிக்கும் இடையில் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளது. பள்ளிவாசலின் 10 கண்ணாடிகள் உடைந்துள்ளன.
பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது பள்ளிவாசலின் பேஷ் இமாம் மேல் மாடியில் இருந்துள்ளார்.
பொலிஸார் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா பதிவுகளைப் பெற்றுள்ளனர். அப்பதிவில் முக மூடியணிந்த மூவரின் படங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை முஸ்லிம் சமய விவாகர மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்ஹின்னைக்கு விஜயம் செய்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்தார்.
அமைச்சர் ஹலீம் ஹஜ் கடமையை நிறைவு செய்துவிட்டு நேற்று மதியமே கண்டிக்கு வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குள்ளான தெப்பிலகொல்ல பள்ளிவாசலுக்கும் வீட்டுக்கும் அமைச்சர் ஹலீம் நேரடி விஜயத்தினை மேற்கொண்டார்.
தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களை இனங் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் இரகசியப் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் நீதி நிலை நாட்டப்படுமெனவும் அமைச்சர் ஹலீம் உறுதியளித்தார்.
கல்ஹின்னை தாக்குதல் சம்பவத்தில் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களையும் அமைச்சர் ஹலீம் பார்வையிட்டார்.
அமைச்சர் அங்கும்புர பொலிஸ் நிலையத்துக்கும் சென்று பொலிஸாருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இதேவேளை பள்ளிவாசலிலிருந்தும் சுமார் 50 மீட்டர் தூரத்திலிருந்து ஹில்மி செய்னுதீன் என்பவரது வீடும் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளது. வீட்டின் கேட் கோடரியால் வெட்டப்பட்டு திறக்கப்பட்டு வீட்டின் யன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. கதவை அலவாங்கினால் திறப்பதற்கு முயற்சித்த வேளை வீட்டிலுள்ளவர்கள் சப்தமிட்டதையடுத்து தாக்குதல் தாரிகள் அலவாங்கினை அவ்விடத்திலேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் ஹில்மி செய்னுதீன் சம்பவம் தொடர்பில் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில்;
வேன் ஒன்றில் வந்த சுமார் 6 அல்லது 7 பேர் வரையிலான குழுவொன்றே முகமூடியணிந்து கொண்டு எனது வீட்டையும் பள்ளிவாசலையும் தாக்கியுள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தந்த இரகசிய பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தியுள்ளன. இது தொடர்பாக என்னிடம் 8 வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.
சம்பவம் தொடர்பில் அங்கும்புர பொலிஸாரும் இரகசிய பொலிஸாரும் விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
தெப்பிலகொல்ல பள்ளிவாசல் செயலாளர் எம்.என்.எம். ரிசாத் சம்பவம் தொடர்பில் விடிவெள்ளிக்கு விளக்கமளிக்கையில்;
‘தாக்குதல் இடம்பெற்றபோது பள்ளிவாசல் ஹஸரத் மேல் மாடியில் இருந்து பயத்தினால் சப்தமிட்டுள்ளார். வெளியே எட்டிப் பார்த்தபோது தாக்குதல் தாரிகள் ஓடியுள்ளனர்.
அவர்களது உருவங்கள் பக்கத்திலிருந்த கடையின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளன. யார் இந்த தாக்குதலை மேற்கொண்டது என்பது தெரியவில்லை. பள்ளிவாசலுக்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்ஹின்னையில் பொலிஸ் ரோந்துச் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்ஹின்னை பகுதியிலுள்ள 3 ஜும்ஆ பள்ளிவாசல்கள் மற்றும் 11 தக்கியாக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
பெபிலகொள்ள எனுமிடத்திலுள்ள பள்ளியே அது. மேலும் இரண்டு ஜீம்மாப் பள்ளிதான் இருக்கின்றது ஹல்கொள்ள எனும் அன்டிய ஊரினையும் சேர்த்துத்தான் மூன்று.
ReplyDeleteWHY yahapalanaya there police needed?
ReplyDelete