ஷகீப் படுகொலை, பிரதான சந்தேக நபரின் வயது 24 - இரகசியம் காக்க நீதிமன்றம் உத்தரவு
வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை (05) உத்தரவிட்டது.
'சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டாம்' எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி - கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதியன்று கடத்தப்பட்டிருந்தார்.
அவரது சடலம், மாவனெல்லை, ஹெம்மாத்தகம, ருக்குலுகம பிரதேசத்திலிருந்து கடந்த 24ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இவரது படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பு ................................................. தெருவிலுள்ள மீன் விற்பனை நிலையமொன்றைச் சேர்ந்த நபரொருவரையும், ........................................... சேர்ந்த நாட்டாமை ஒருவரையும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், வியாழக்கிழமை (01) கைது செய்தனர். வர்த்தகரின் கொலை தொடர்பில் வெள்ளிக்கிழமை மதியம் கைதான நபருடன் சேர்த்து மொத்தமாக 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என ............................................... பிரதேசத்தை சேர்ந்த ................................................................ (வயது 24) என்பவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் இனம் காணப்பட்டார். வர்த்தகர் கடத்தப்பட்ட இடத்திலுள்ள சீ.சீ.டிவி கெமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ ஆதாரங்களைக் கொண்டே, முதலில் 22 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
'இதேவேளை, கேகாலையின் வெவ்வேறு பகுதிகளில் வர்த்தகரின் தொலைபேசி, உள்ளாடைகள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி போன்றவற்றை எறிந்தும் புதைத்தும் உள்ளனர்' என்றும் அஜீத் ரோஹண அன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Pirathaana sandeha nafar moondram kaththam thinda rahasiyam ellorukkum theriyum. Peyar mattum blank.
ReplyDelete