Header Ads



2070 இல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!


2050-ல் இந்தியாவிலும், 2070-ல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!

2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்றும், 2070ல் உலக அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் 'ஆய்வு' முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள ப்யூ (Pew) ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் 'உலக மதங்களின் எதிர்காலம்' என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்றாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இந்தியாவில்தான் வசிப்பார்கள் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, இந்தோனேஷியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

2050 வாக்கில் ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருமடங்காகியிருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

புத்த மதத்தைப் பொறுத்தவரை, 2010ல் எந்த எண்ணிக்கையில் இருந்ததோ, அதே எண்ணிக்கை நீடிக்கும்.

உலகில், ஒவ்வொரு மதத்திலும் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை, எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள், அவர்களுடைய வயது, பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சர்வதேச அளவில் இடம்பெயர்தல், மதமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக ப்யூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டு அமெரிக்காவை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் உருவெடுக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்

PEW RESEARCH CENTER அறிவிப்பு

20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க முஸ்லிம்களின் எண்ணிக்கை குறிப்பிட்டு சொல்ல தக்க விதத்தில் இருக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுத்துள்ளது.

மேலும் ஒவ்வொரு நாளும் இஸ்லாத்தின் வளர்ச்சி அமெரிக்காவில் விரைவாகி கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் உருவெடுத்து விடும். அமெரிக்காவின் சிறுபாண்மை மதங்களில் ஒன்றாக கிருத்துவம் சுருங்கி விடும் என்று வாஷிங்டெனில் இயங்கும் ஆய்வு நிறுவனம் PEW RESEARCH CENTER தனது ஆய்வு ஒன்றில் குறிப்பிட்டிருப்பது அமெரிக்கர்களிடையே பரபரப்பை உருவாக்கி இருக்கறது.

இறை மறுப்பாளர்கள் சத்தியத்தின் ஒளியை தாங்கள் வாய்களால் ஊதி அணைக்க முயல்கின்றனர் இறைமறுப்பாளர்கள் விரும்பவில்லை என்றாலும் இறைவன் தனது மார்கத்தை முழுமையாக்கியே தீருவான்என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும்விதமாக இந்த ஆய்வு அமைகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

4 comments:

  1. இந்த ஆய்வாளர்கள் ஆய்வறிக்கை விடுவது முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்ச்சியை அதிகப்படுத்தி தாக்குதல்களை தொடர்வதற்கான ஆர்வமூட்டலே,இதை நம்மவர்கள் விளங்காமல் குதிப்பதால் ஒன்றும் ஆவதில்லை.அல்லாஹ் யாருக்கல்லாம் ஹிதாயத்தை நாடி இருக்கானோ அவர்களை நேர்வழிப்படித்தியே ஆவான் .

    ReplyDelete
  2. முஸ்லீம்களுக்கு சாதகமான பல செய்திகளை மூடி மறைத்துக் கொண்டிருக்கும் ஸியோனிச அமைப்புக்கள் இவ்வாறான செய்திகளை பரபரப்பாக வெளியிருவதன் மர்மம் என்ன? இதன் பிண்ணணியில் முஸ்லிம்கெழுக்கெதிரான பல சதிகள் மறைந்திருக்கலாம். தற்போது உலகளாவிய அளவில் இடம்பெற்றுக்கொண்டிிருக்கின்ற முஸ்லீம்களுக்கெதிரான யுதர்களினதும் இந்துத்துவ வாதிகளினதும் நடவடிக்கைகளை மேலும் தீவிரம்படுத்தும் உள் நோக்கம் இதற்குள் மறைந்திருக்கக் கூடும். எனவே முஸ்லீம்களும் முஸ்லீம் ஊடகங்களும் இவ்வாறான செய்திகளை முண்டியடித்துக்கொன்டு பரப்புகின்ற விடயத்தில் மிகுந்த அவதானமும் எச்சரிக்கையும் கையாளவேண்டும்.

    ReplyDelete
  3. இத்தகவல்களை 2050,2070 களில் வெளியிட்டால் நன்று. ஏனெனில் இவ்வாறு வெளியிடும் போது இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வும் காழ்ப்புணர்ச்சியும் சிலருக்கு அதிகரிக்கலாம். அதனால் முஸ்லிம்கள் மீது இந்தியா போன்ற நாடுகளில் நடக்கின்ற கொடுமைகள் அதிகரிக்கப்படலாம்.

    ReplyDelete

Powered by Blogger.