2020 இல் மைத்திரியா..? ரணிலா..??
2020ம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை அமைப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேரிவித்துள்ள கருத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கியுள்ளார்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சி 2020ம் ஆண்டில் அரசாங்கம் அமைக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியும் 2020ம் ஆண்டில் அரசாங்கம் அமைப்பதாக கூறி வருவது குறித்து பிரதமரிடம் கட்சி உறுப்பினர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இணக்கப்பாட்டு அரசாங்கம் 2020ம் ஆண்டு வரை செல்லும். ஜனாதிபதி அரசாங்கம் அமைக்கும் யோசனையுடன் காணப்படுவது போன்று நானும் அரசாங்கம் அமைக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றோம்.
இது தொடர்பில் நாட்டு மக்கள் தீர்மானமொன்றை எடுப்பார்கள் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
ReplyDelete(அல்குர்ஆன் : 3:26)