Header Ads



கத்தார் வாழ், புத்தள சகோதர்களின் ஒன்றுகூடல் 2016.


நேற்று(13.செப்) PAQஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உம்பாப் கடற்கரை திடலில் சிறந்த முறையில் நடைபெற்றது.

தொடர்ந்து 05வது முறையாக கத்தார் வாழ் புத்தளம் சகோதர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட  இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான எமது சகோதரர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். 

மாலை 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிகழ்வில் முதலாவதாக முட்டை பிடித்தல் போட்டி இடம்பெற்றது. இதில் பல சகோதரர்கள் உற்சாகமாக பங்கேற்றார்கள். சகோ.மின்காஸ் மற்றும் சகோ.ஷிபான் ஆகியோர் கடைசிவரை முட்டை உடையாமல் பிடித்து அம் முட்டை பிடித்தல் போட்டியில் வெற்றிபெற்றார்கள். 

அதனை தொடர்ந்து நாணயம் தேடுதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், மூட்டை அடித்தல், கம்பு சுற்றி ஓடுதல் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகளும் நடைபெற்றன. மாவினுள் நாணயம் தேடும் போட்டியில் சகோ.அஸ்லி, முட்டி உடைக்கும் போட்டியில் சகோ. முபஸ்ஸர், சகோ.நஜாத் மூட்டை அடித்தல் போட்டியில் சகோ.ஷிபான் ஆகியோரும் வெற்றி பெற்றனர். குழுவாக நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் ஓல்ட் ரய்யான் அணியினரும், கம்பு சுற்றி ஓடும் போட்டியில் செகலியா 4 மற்றும் அல் சாட் அணிகளும், இறுதியாக நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் மதினத் கலீபா நோர்த் அணியினரும் வெற்றிபெற்றார்கள். 

போட்டிகளின் நடுவே இரவு உணவு, தேநீர் பானங்கள் வழங்கப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. 

நிகழ்வுகளின் போது PAQஇன் செயற்குழு அங்கத்தவர்களோடு ஏனைய புத்தள சகோதர்களும் இணைந்து செயற்பட்டு இந்த ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க உதவினார்கள்.

கடல் கடந்து தொழில் செய்யும் எமது சகோதர்களின் பெருநாளை நம் ஊர் வாசனையோடு ஒவ்வொரு வருடமும் கொண்டாட நீங்களும் PAQ உடன் இணைத்திடுங்கள்.

Azardeen Rameez
Secretary 
Puttalam Association Qatar 

1 comment:

  1. Why do you want to service in Qatar when Allah has given you lagoons and land to do farming in your own place of birth?most importantly,you can live with your family together.

    ReplyDelete

Powered by Blogger.