இனவாதிகள் 2014 இல் தீமூட்டிய கடையே, மீண்டும் தீக்கரை - அதிர்ச்சியில் மரணித்தவரின் ஜனாஸா நல்லடக்கம்
-விடிவெள்ளி SNM.Suhail-
அளுதகம நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பிரபல வர்த்தக நிலையமொன்று நேற்றிரவு தீயில் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது.
அளுத்கம மத்துகம வீதியிலுள்ள சம்சுதீன் ஹாஜியார் என்பவருக்குச் சொந்தமான மல்லிகாஸ் எனும் அந்நகரிலுள்ள மிகப்பெரிய ஆடைக் காட்சியறையே நேற்றிரவு 11 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீயணைப்பு படையினர் மேற்கொண்ட போதிலும் நிலைகைளை கட்டுப்படுத்தமுடியாது கடை முற்றாக எரிந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாடையகம் 2014 ஆம் ஆண்டு அளுத்கம பகுதியில் இனவாதிகள் மேற்கொண்ட வன்முறைத் தாக்குதலின்போது தீ மூட்டி எரிக்கப்பட்டது.
இதன்போது இக் கடைக்கு சுமார் 5 கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.
அத்துடன் 2006 ஆம் ஆண்டும் இனவாதிகளால் மல்லிகாஸ் காட்சியறை முற்றாக எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க குறித்த கடையில் தீ மூண்டதையடுத்து அருகிலுள்ள அஸ்மாஸ் எனும் ஆடையகத்திற்கும் தீ பரவலாம் எனும் அச்சத்தில் அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அக் கடை உரிமையாளர் முஹம்மட் ஸபரின் மைத்துனரான ஹில்மி என்பவர் அதிர்ச்சியில் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.
இவரை உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்-தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று வௌ்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பேருவளையில் இடம்பெற்றது.
Inna lillaahi wainna ilaihi raajioon.
ReplyDelete