இலங்கை வந்த 158 மில்லியன் ரூபா பெறுமதியான காருக்கு, 93 மில்லியன் ரூபா வரி
இலங்கையின் இறக்குமதி வரலாற்றில் இதுவரையில் அதிக விலைமதிப்புள்ள கார் ஒன்று தற்போது தருவிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த காரை முன்னணி வர்த்தகர் ஒருவரே இறக்குமதி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
158 மில்லியன் ரூபா பெறுமதியான Rolls Royce என்ற ஆடம்பரமான காரே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர்கள் பயன்படுத்தும் Rolls Royce Wraith என்ற காரே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காரின் இறக்குமதி தீர்வையாக 93 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Rolls Royce Wraith என்ற காரிற்கான தீர்வை பணம் நேற்றைய தினம் செலுத்தப்பட்டதுடன் தற்போது சுங்க திணைக்களத்தில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நிறை சுமார் 2.4 தொன்கள் என்றும் இரட்டைக் கதவுகளைக் கொண்ட இந்த கார் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
The owner of this car should be a psychopath unless
ReplyDeletethe car would be available for wedding hires . Our
roads and drivers are a real threat to luxuries of
this nature on the road . Quality mechanical
maintenance is not commonly available in the country
for this kind of luxury and to steal the whole
attention to this car and its owner even in a party
would be attention-grabbing cheap quality for a man
of sound mind . In a nutshell , egoism at its peak.
இலங்கையில் உள்ள பாதைகளில் இந்தக்காரும் three wheel க்கு பின்னால்தான் போக வேண்டும் .
ReplyDelete15.8 கோடி ரூபாவுக்கு எத்தனை தொழில் முயற்சியை ஆரம்பிக்கலாம் எத்தனை ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கலாம்....?
ReplyDeleteஎன்னதான் செல்வாக்கு இருந்தாலும் இந்த அளவுக்கு செலவுசெய்து ஒரே ஒரு வாகனத்தை கொள்வனவு செய்து எங்கு சொல்லப்போகிறார் இந்த மனிதர் ? எப்படியும் இலங்கைக்குள் தானே சுற்றித் திரிய வேண்டும் ?
நமது நாடு எவ்வளவு கடனில் சிக்கியுள்ளது? வறுமைக்கு கோட்டுக்கு கீழ் தொழில் வாய்ப்பு இல்லாமல் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அவதிப்படுகின்றன ?இலங்கையைப் பொறுத்தவரை மனச் சாட்ச்சியுள்ள எந்த மனிதனும் இந்த அளவுக்கு பணத்தை வீணாக்க நினைக்கமாடடான் அவன் எந்த மதத்தைப் சேர்ந்தவனாக இருந்தாலும் சரியே....
@ Munawwar there is nothing wrong in that. He has money so he buys it. Allah gives Rizks for u to spend. Worlds billionaires have body guards roughly £500 a person, some may think that's stupid to keep body guards. There some things has to be in that way.
ReplyDeleteAllah gives everything for a reason. You may think that car is waste but u may have Porche or GLC Suv , people below u will think ur wasting money by buying that car. That's how the world is.
He has earned for it and it's not haram for him to buy such an expensive car or a private yacht or a jet.