Header Ads



தேசியக் கொடிக்கும், 'ஆயுபோவன்' னுக்கும் 150 மில்லியன் அமெரிக்க டொலர் - சிக்குவாரா ரோஹித..?

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் அவரின் கடைசி மகன் ரோஹித் ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த நாட்டு அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் செயற்கைக்கோள் திட்டத்திற்கு முதலீடு செய்தன.

குறித்த தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவப்பட்டதற்கு எவ்வித தொழில்நுட்ப அல்லது தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அப்படி என்றால் செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவப்பட்டதன் முழுமையான செயற்பாட்டில் இலங்கை தொடர்புபட்டிருந்தாலும் அந்த செயற்கைக்கோளின் ஒரு பகுதியில் இலங்கை தேசியக் கொடி மற்றும் “ஆயுபோவன்” என்ற வாரத்தை பதிவு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது, பராமரிப்பு மற்றும் தரவு பெற்றுக் கொள்ளப்பட்டமை ஆகிய அனைத்து பங்கும் சீன அரசாங்கத்திற்கு மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரியில் இருந்து விடுவித்தமை மற்றும் பயனற்ற வகையில் அந்த பணத்தை முதலீடு செய்தமை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் வாக்குறுதிக்கமைய தொடர்பாடல் அமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக இந்த செயற்கைக்கோளில் பயன்பாட்டை பெற்றுக்கொள்ள முயற்சி செய்த போது, செயற்கைக்கோளில் இலங்கைக்கு எவ்வித உரிமையும் கிடையாதென அறிவித்தமையின் ஊடாகவே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.