காங்கேசன்துறையில் கடுகதி ரயில் 140 அடி தூரத்திற்கு, நிலத்தில் ஓடியதால் பரபரப்பு (படம்)
காங்கேசன்துறை ரயில் நிலைய முடிவிடத்தில் நிறுத்தவேண்டிய கடுகதி ரயில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து முடிவிடத்தை தாண்டி முன்னோக்கி நகர்ந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த ரயில், தடம்புரண்டு முடிவிடத்தையும் தாண்டி, சுமார் 140 அடிகள் தூரத்திற்கு நிலத்தில் ஓடியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
காலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த கடுகதி ரயிலே அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
யாழ் ரயில் நிலையத்திலிருந்து, காங்கேசன்துறை ரயில் நிலைய முடிவிடத்தின் ஊடாக திருப்பிக்கொண்டு கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த கடுகதி ரயில், அதிகாலை 5 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் ஓடியுள்ளது.
இந்த சம்பவத்தின்போது ரயிலில் பயணிகள் இருக்கவில்லை என்றும், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்துவதற்காக அனுராதபுரம் ரயில் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தொழில்நுட்ப அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment