Header Ads



கபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள், பழமையான வீடு உடைக்கப்பட்டது

நல்லாட்சியின் பிரபல அமைச்சர் கபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள் பழமையான வீடானது இன்று -19- உடைக்கப்பட்டுள்ளது.

மாவெனெல்ல நகருக்கு அண்மையில் மாவனெல்ல -ஹெம்மாத்தகம வீதியில் இந்த வீடுஅமைந்திருந்ததோடு, குறித்த வீதியானது கம்பளை நகர் வரை புனரமைப்பு செய்வதன்பொருட்டு அமைச்சரின் வீடு உடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடானது தமது பரம்பரை வீடு என்றும், தான் இந்த வீட்டிலே பிறந்துவளர்ந்ததாகவும், தான் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்த போது இந்த வீதியினைஅபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும் இன்று இந்த இடத்திற்கு வருகை தந்திருந்தஅமைச்சர் கபீர் ஹாசீம் குறிப்பி;ட்டுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் வீதிகளை புனரமைப்பு செய்த போது அரசியல்வாதிகள் தமதுவீடுகளை, நிலங்களை பாதுகாப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், சிலர்சாதாரண மக்களது இடங்களை உரிமை கொண்டாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தான் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த விடயத்தில் முன்னோடியாக திகழவேண்டும் என இவ்வாறான முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்;.

இதேவேளை குறித்த வீதி புனரமைப்பிற்காக 5670 மில்லியன் நிதியினை அரசு ஒதுக்கீடுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.