Header Ads



ஷகீப் படுகொலை - 11 பேரின் கடவுச்சீட்டுக்கள் முடக்கம் - பலர் தொடர்பில் ரகசிய கண்காணிப்பு தொடருகிறது

-விடிவெள்ளி  MFM.Fazeer-

கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி, கொத்­த­லா­வல எவ­னியூ பகு­தியில் கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலை­மானை படு­கொலை செய்த கொலை­யா­ளிகள் மற்றும் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்கள் என நம்­பப்­படும் இருவர் தொடர்­பி­லான பல்­வேறு தக­வல்­களை பொலிஸார் சேக­ரித்­துள்­ளனர்.

சேத­வத்த மற்றும் கிராண்பாஸ் ஆகிய பகு­தி­களைச் சேர்ந்த குறித்த இருவர் தொடர்­பிலும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விரி­வான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில் அவர்கள் விரைவில் கைது செய்­யப்­படும் சாத்­தியம் உள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இவ்­வாறு அடை­யாளம் கணப்­பட்­டுள்ள இரு­வரும் சகீப் சுலை­மானின் சட­லத்தை மாவ­னெல்லை - ஹெம்­மாத்­த­கம பகு­திக்கு கொண்டு சென்­றுள்­ளார்கள் என பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளதைத் தொடர்ந்து அவர்கள் பல சந்­தர்ப்­பங்­களில் குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இதனை விட மேலும் சிலர் தொடர்­பிலும் பொலிஸார் ரக­சிய கண்­கா­ணிப்பு பிரி­வினர் ஊடாக உளவு பார்த்து வரு­கின்­றனர்.

 இந் நிலையில் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கொலை­யுடன் சம்­பந்­தப்­பட்­டுள்­ளார்கள் என்ற சந்­தே­கத்தில் மேலும் சிலரின் கடவுச் சீட்­டுக்­க­ளையும் நீதி­மன்றின் அனு­ம­தி­யுடன் தற்­கா­லி­க­மாக முடக்­கி­யுள்­ளனர்.

இது வரை சுமார் 11 பேரின் கடவுச் சீட்­டுக்கள் இவ்­வாறு மொத்­த­மாக முடக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இத­னை­விட, கொலை­யா­ளி­களைக் கைது செய்ய கொழும்பு, கண்டி பிர­தான வீதியின் பெற்றோல் நிரப்பு நிலை­யங்கள், இரவு நேர உண­வ­கங்­களி லும் பொலிசார் தக­வல்­களை சேக­ரித்­துள்­ளனர். 

அதன்­படி இது வரை சந்­தேக வல­யத்­துக்குள் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு வரும் 8 வர்த்­த­கர்­களும் கொலை இடம்­பெற்­ற­தாக நம்­பப்­படும் கடந்த 21 ஆம் திக­தி­யன்று எங்கு சென்­றார்கள், யாருடன் இருந்­தார்கள், யாருக்­கெல்லாம் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­னார்கள், அன்­றைய தினம் அவர்­க­ளது வாக­னங்கள் எத்­தனை கிலோ மீற்­றர்கள் பய­ணித்­துள்­ளன எந்த பாதையில் பய­ணித்­தன, உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து பொலிஸார் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

இதற்­காக குறித்த வர்த்­த­கர்­களின் சார­தி­க­ளிடம் வாக்கு மூலம் பெற்­றுள்ள விசா­ரணை அதி­கா­ரிகள், வர்த்­த­கர்­களின் தொலை­பேசி வலை­ய­மைப்பை மையப்­ப­டுத்­தியும், கொழும்பு முதல் மாவ­னல்லை வரை­யி­லான ஏ 1 பிர­தான வீதியில் உள்ள அனைத்து சி.சி.ரி.வி. கம­ராக்­களை ஆய்வு செய்தும் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்­கவின் நேரடி மேற்­பார்­வையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிஸாந்த டி சொய்­ஸாவின் ஆலோ­ச­னைக்கு அமைய அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டி சில்­வாவின் கீழான 20 விசா­ரணைக் குழுக்­களே இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

No comments

Powered by Blogger.