கடந்த 10 ஆண்டுகளில், இம்முறையே ஹாஜிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - சவூதி வெளியிட்ட புள்ளிவிபரம்
இம்முறை ஹஜ் கடமையில் 54.6 வீத ஆண் மற்றும் 45.4 வீத பெண் வெளிநாட்டு யாத்திரிகர்கள் பங்கேற்றதாக ஹஜ் கடமை தொடர்பில் சவூதி அரேபிய நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விபரம் காட்டுகிறது.
இதில் பெரும்பாலான ஹஜ் யாத்திரிகர்கள் விமானத்தின் ஊடாகவே ஹஜ் கடமைக்கு வந்துள்ளனர். இவ்வாறு 94 வீதமான யாத்திரிகர்கள் விமானத்தை பயன்டுத்தியுள்ளனர். 5 வீதமானவர்கள் மாத்திரமே தரை வழியாக எல்லையை கடந்தும் ஒரு வீதத்தினர் கடல் மார்க்கமாகவும் ஹஜ் கடமைக்கு வந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஹஜ் யாத்திரிகர்களில் இம்முறை வீழ்ச்சி கண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் 1.7 மில்லியன் வெளிநாட்டினர் மற்றும் 746,511 உள்நாட்டினர் ஹஜ் கடமையில் பங்கேற்றதன் மூலம் அந்த ஆண்டில் 2.4 மில்லியன் பேர் ஹஜ் கடமையில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும் இந்த ஆண்டில் 1,325,372 வெளிநாட்டினர் மற்றும் 5,37,537 உள்நாட்டினர் ஹஜ் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டு ஹஜ் கடமையில் ஈடுபட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,862,909 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இதுவே ஹஜ் கடமையில் பங்கேற்ற மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.
எனினும் 2012 ஆம் ஆண்டு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் ஹஜ்ஜில் பங்கேற்றதே கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகும்.
இந்த ஆண்டில் சவூதி அரேபியாவில் இருந்து ஹஜ் கடமையில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகளில் எகிப்தியரே அதிகமாகும். அதனை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய நாட்டவர்கள் உள்ளனர்.
ஹஜ் கடமையை ஒட்டி மக்கா நுழைவாயில்கள் ஊடாக பெறப்பட்ட தரவுகளை மற்றும் ஏனைய விபரங்கள் கொண்டே இந்த புள்ளி விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
நன்றி Al Arabiya!
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ் இம்முறை ஷியா காபீர்கள் மக்காவுக்குள் நுழையவில்லை அதனால் அல்லாவின் உதவி கொண்டு பேராபத்துகள் எதுவும் நடக்க வில்லை.எதிர் வரும் காலங்களிலும் ஷியா காபீர்களை அனுமதிக்க கூடாது.
ReplyDelete