Mp களின் வாகன இறக்குமதிக்கு 200 கோடி, தொலைபேசிக்கு 10 கோடி - நல்லாட்சி மீது கடும் விமர்சனம்
சுங்கத் தீர்வை இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் பொருட்டு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கம் இல ங்கை வங்கிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த ஆலோசனையின்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகன அனுமதிப் பத்திரத்தின் பெறுமதியான 6,25000 அமெரிக்க டொலர்களுக்கான வங்கிக் கடனை அவர்கள் ெபற்றுக் கொள்ள முடியும். இதன்படி பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு 93 இலட்சம் ரூபா கடனாக வழங்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு சுமார் 200 கோடி ரூபாவை இலங்கை வங்கி கடனாக வழங்கும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த வருடாந்தம் 13 வீத வட்டியுடன் ஏழு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரொருவரின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். ஏற்கனவே பதவிக் காலத்தில் ஒரு வருட காலம் பூர்த்தியாகியுள்ளது. நான்கு வருட காலமே எஞ்சியுள்ளது. எப்படியிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பதவிகாலத்தின் பின்னரும் இந்த கடனைச் செலுத்த மூன்று வருட காலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகன கடனை ஒரு வருட காலத் தில் மீளச் செலுத்த வட்டியில்லாமல் மாதாந்த ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமாக செலுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு மாதாந்தம் சகல கொடுப்பனவுகளுடன் சுமார் ஒரு இலட் சம் ரூபாவரையே கிடைக்கும்.
பொது மக்கள் கடன் பெறும்போது அந் தக் கடனை மீளச் செலுத்த கடன் பெறும்
நபருக்கு போதிய வருமானம் கிடைக்கின் றதா என அங்கு ஆராயப்படும் வருமான த்தில் 40 சதவீதம் மாதாந்தம் கடன் செலு த்த வேண்டியிருந்தால் கடன் வழங்கப்பட மாட்டாது. ஆனால், பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கு வங்கி இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்பது குறித்து விமர் சனங்கள் எழுந்துள்ளன.
2
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொலைபேசி கட்டணம் 10 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றினால் வழங்கப்பட்ட இரண்டு தொலைபேசிகளுக்கான கட்டணம் இதுவரை காலமும் அரசினாலேயே செலுத்தப்பட்டு வந்தது. எனினும் இந்த நடைமுறையில் அரசாங்கம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
தொலைபேசி கட்டணங்களை செலுத்தாது மாதாந்தம் 50000 ரூபா தொலை பேசிக் கட்டண கொடுப்பனவை வழங்க அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருடாமொன்றுக்கு சுமார் பத்து கோடி ரூபா மேலதிக செலவு ஏற்படும் என நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா இரண்டு நிலையான தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி இணைப்புகளுக்கான கட்டணமாக மாதாந்தம் சுமார் 35 லட்ச ரூபா செலுத்தப்படுகின்றது.
எனினும் தொலைபேசி கட்டணமாக 50000 ரூபா வழங்குவதனால் இந்தக் கட்டணத்தொகை மேலும் அதிகரிப்பதாகவும் ஆண்டு தோறும் சுமார் பத்து கோடி ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
This is the so-called good governance.
ReplyDelete