"நல்லாட்சியின் மீதான, மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது"
நல்லாட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பின் ஆயுள் குறைவடைந்து செல்வதாக வௌ்ளிக்கிழமை மன்றம் (Friday Forum) தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் பாரிய இலாபங்களைக் கருத்திற்கொண்டு தமக்கு நெருக்கமானவர்களை அலுவலகங்களில், அமர்த்தி வருவதாகவும் நண்பர்கள் உயர் அலுவல்கள் பணிக்கு அமர்த்தப்படுவதன் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் Friday Forum சுட்டிக்காட்டியுள்ளது.
திருப்தியடையாத தலைவர்களை திருப்திபடுத்துவதற்கான ஆயத்தங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய நிர்வாகத்தில் செயலாக்கம் பெற்று மக்களால் புறக்கணிக்கப்பட்ட பாரிய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் இன்று மீண்டும் பேச்சுவார்ததை நடத்தப்படுவதுடன், இந்த திட்டங்கள் மக்களுக்கு மோசமான விளைவையே தோற்றுவித்திருந்தது எனவும் Friday Forum சாடியுள்ளது.
அரசாங்க உருவாக்கத்தின் அவசர தேவைகருதி அதிக எண்ணிக்கையான அமைச்சுக்களைக் கொண்டுள்ளதாகவும் அதன் மூலம் மக்களின் கணிசமான நிதியாதாரம் விரயம் செய்யப்படுவதாகவும் Friday Forum குற்றம் சுமத்தியுள்ளது.
துல்லியமான தொழிலாளர் முறைமைகளை ஸ்தாபிப்பதன் மூலம் ஒருங்கிணைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை தெளிவாக அறிய முடிகின்றது.
விரிவான ஆலோசனைத்திட்டமிடல் மூலம் பங்குதாரர்களை ஒருமைப்படுத்தி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தற்போதைய அரசாங்கம் பெற்றுக் கொள்ள முன் வரவேண்டும் என Friday Forum வலியுறுத்தியுள்ளது.
Post a Comment