Header Ads



"அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கமில்லை, ஆனால் மக்களை குழப்புவார்களாம்" விமலின் வீட்டில் இரகசிய பேச்சு

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த பாத யாத்திரையின் நோக்கம் அரசாங்கத்தை கவிழ்ப்பதல்ல எனவும் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களை அரசாங்கத்தின் மீது வெறுப்படைய செய்வதே எனத் தெரியவந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச தென் கொரியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்று கடந்த 4ம் திகதி விமல் வீரவன்ஸவின் வீட்டில் நடந்துள்ளது.

இதில் டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, லொஹான் ரத்வத்தே, பந்துல குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, சீ.பீ. ரத்நாயக்க ஆகியே மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வருடந்தோறும் பண்டிகை காலத்தில் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவது குறித்து இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நீர்கொழும்பு, கந்தானை, ஜா-எல வத்தளை வழியாக கொழும்பு, புறக்கோட்டை வரை பாத யாத்திரையை நடத்தி, மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவது கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த பாத யாத்திரையின் திட்டமாகும்.

கிறிஸ்தவர்கள் வசிக்கும் பிரதேசங்கள் வழியாக கொழும்புக்கு வந்து, இரண்டு இரவுகள் கொழும்பு புறக்கோட்டையில் தங்கியிருந்து சகல வர்த்தக நடவடிக்கைககளையும் முடக்குவது இவர்களின் திட்டமாகும்.

மேலும் இரவில் தீ பந்தங்களை பயன்படுத்துவது, பாத யாத்திரையில் நடனங்களை ஆடாமல் போராட்ட தோற்றத்தை ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் திட்டங்களை கூட்டு எதிர்க்கட்சியினருக்கு தெரியப்படுத்தும் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் பற்றிய தகவல்களும் இந்த பேச்சுவார்த்தையின் போது வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது

1 comment:

  1. அரசியல் கோமாளிகள்!

    ReplyDelete

Powered by Blogger.