லதீப் விவகாரத்தில், பூஜித்த மீதான நம்பிக்கை தகர்ந்ததா..?
பிரபுக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் பாரப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் திணைக்களத்தின் ஒரு பிரிவே பொலிஸ் விஷேட அதிரடிப்படையாகும்.
பிரபுக்கள் பாதுகாப்புக்கு மேலதிகமாக போதைப் பொருள் ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கலகமடக்குதல் உள்ளிட்ட முக்கிய பல பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு அதிரடிப்படையிடம் தற்போது உள்ளது.
இத்தகைய பணிகளை முன்னெடுக்கும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபை பொலிஸ் ஆணைக் குழு கடந்த 8 ஆம் திகதி தேர்ந்தெடுத்து 9 ஆம் திகதி அவரின் நியமனக் கடிதத்தை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியது.
எனினும் நேற்றுக் காலை வரை பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக பொலிஸ் மா அதிபரால் அந்த நியமனம் தொடர்பில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான நியமனக் கடிதம் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லத்தீபிடம் கையளிக்கப்பட்டிருக்கவில்லை.
இந் நிலையில் ஊடகங்களும் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் தொடர்ச்சியாக குரல் எழுப்பிய நிலையில், நேற்று பொலிஸ் மா அதிபரை இது தொடர்பில் கேள்வி கேட்க தேசிய பொலிஸ் ஆணைக் குழு தயாரான நிலையிலேயே அந்த நியமனம் லத்தீபுக்கு வழங்கப்பட்டது.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியாக இருந்த ( ஒப்பந்த அடிப்படையில் )பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேராவின் ஒப்பந்த காலம் கடந்த 8 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து கட்டளைத் தளபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.
இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி அதிரடிப்படை கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபை நியமிக்க அனுமதியளித்த பொலிஸ் ஆணைக் குழு அதற்கான நியமனக் கடிதத்தை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதிரடிப்படையின் கட்டளை தளபதியாக பொலிஸ் மா அதிபர் பரிந்துரைத்தவரே இந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப். அப்படி இருக்கையில் அவரையே அப்பதவியில் அமர்த்த ஆணைக் குழு அனுமதியளித்த போதும் அதனை வழங்க இத்தனை இழுத்தடிப்பு ஏன் என்ற கேள்வி யாருக்கும் எழக் கூடும்.
ஆம், இது தொடர்பில் தான் நாமும் தேடினோம்.
அப்போது தான் பலம்மிக்க அரசியல் வாதியின் மகன் ஒருவர் தொடர்பிலும் அதிரடிப்படையின் தற்போதுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தொடர்பிலான தகவல்கள் விடிவெள்ளியிடம் பதிவாகின.
அதிரடிப்படை கட்டளைத் தளபதி பதவியை குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கும் முகமாக குறித்த சக்தி மிக்க அரசியல் வாதியின் மகனின் அழுத்தம் காரணமாக இந்த இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல் அப்போதே எம்மால் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
உண்மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் அதிரடிப்படை கட்டளைத் தளபதி பதவிக்கு மிகப் பொருத்தமானவர். ஏனெனில் அவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஆரம்ப கால அங்கத்தவர்.
1979 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்த எம்.ஆர். லத்தீப் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலான மிக நீண்ட அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டவர் எனக் கருதப்படுபவராவார்.
தற்போது பொலிஸ் பயிற்சிகள் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பிலான விவகாரங்களுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லத்தீப் கடமையாற்றுகின்றார். இந் நிலையிலேயே அதற்கு மேலதிகமாக அவரை அதிரடிப்படையின் கட்டளை தளபதியாக நியமிக்க பொலிஸ் ஆணைக் குழு தீர்மானித்திருந்தது.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளில் எம்.ஆர். லத்தீப் மிக முக்கியமானவர்.
அதே நிலைமை அவருக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் நீடிக்கின்றமை கவலைக் குரியது.
தற்போது பிரபுக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விஷேட அதிரடிப்படையே முன்னெடுத்து வரும் நிலையில் அதற்கான கட்டளை தளபதியாக லத்தீபை நியமிப்பது என ஆணைக் குழு தீர்மானித்திருந்தது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது, பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றால் அதனை எதிர்கொள்வது, தடுப்பது தொடர்பில் சர்வதேச பாதுகாப்பு தரப்புடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பின்னர் அது குறித்த சிறந்த திட்டத்தை முன்வைத்தவர் லத்தீப் ஆவார்.
அமெரிக்க, இங்கிலாந்து பாதுகபபுத் துறையினரைத் தாண்டி பயங்கரவாதத்துக்கு எதிரான மிகச் சிறந்த திட்டத்தை முன்வைத்த இந்த அதிகாரி உண்மையிலேயே அப்பதவிக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை அதிரடிப்படையின் பணிகளுடன் ஒப்பீடு செய்து நோக்கும் போது தெளிவாகும்.
அத்துடன் கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த பாப்பரசரின் பாதுகாப்பு திட்டத்தை வகுக்கும் நடவடிக்கை கூட லத்தீபிடமே கையளிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் பிரபுக்களின் பாதுகாப்பு குறித்த அனுபவம் திறமைகளை மையப்படுத்தியே லத்தீபுக்கு அதிரடிப்படை கட்டளைத் தளபதி பதவியை ஆணைக் குழு வழங்க முன்வந்ததாக ஆணைக் குழுவின் உள்ளக தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது.
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த சிறிவர்தன அண்மையில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அதிரடிப்படை உரிமை மீறல் மனுவின் போது பிரதம நீதியரசர் தெளிவான ஒரு அறிவிப்பை செய்திருந்தார்.
அதாவது பொலிஸ் மா அதிபருக்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தர நிலையில் இருந்து அதற்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் , நியமனம் தொடர்பில் எவ்வித முடிவினையும் எடுக்க முடியாது என்ற உண்மையே அதுவாகும்.
அந்த வகையில் அதற்கான உரிமை தேசிய பொலிஸ் ஆணைக் குழுவினருக்கே உள்ளது.
அப்படியாயின் பொலிஸ் ஆணைக் குழு வழங்கிய நியமனத்தை கையளிக்காது இழுத்தடிப்பு செய்தமையானது பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்க்கும் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
சக்திமிக்க அரசியல்வாதியின் மகன் ?????????? அப்படியெனில் இன்னும் நாட்டில் சர்வதிகாரம் உள்ளதா ????????????
ReplyDeleteThis is wrong. Because, IGP Has recommended DIG Latheef Name to the Police commission.
ReplyDeleteI can say the reasons for the delay only is political intervention