Header Ads



ஹக்கீமுக்கு வந்த ஆத்திரம் - பஷீரின் கடிதத்தை கிழித்து, குப்பைத் தொட்டிக்குள் போடவைத்தார்..!


-M.I.Mubarak-The Journalist-

மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் பல பதில்களை எதிர்பார்த்து அண்மையில் அனுப்பி வைத்த கடிதத்துக்கு இன்னும் பதில் இல்லை.

அந்தக் கடிதத்துக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?நான் சொல்கின்ற ஒரு சம்பவத்தை வைத்து அந்தக் கடிதத்துக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரிப்பது என்று மு.கா உயர்பீடம் முடிவெடுப்பதற்கு முன் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் அவரது கொழும்பு இல்லத்தில் அது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது அங்கு சென்ற பஷீர் சேகுதாவூத் வாகனத்தில் இருந்தவாறு அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரின் ஊடாக ஹக்கீமுக்கு கடிதம் ஒன்றைக் கொடுத்தார்.

ஓடோடிச் சென்று அந்த பாதுகாப்பு அதிகாரி கூட்டத்தில் இருந்த ஹக்கீமிடம் கடித்தை நீட்டியபோது அந்த கடிதத்தை கடித உரையுடன் சேர்த்து துண்டு துண்டாகக் கிழிக்குமாறு அந்த அதிகாரியிடம் ஹக்கீம் கூறினார்.அவரும் அவ்வாறே செய்தார்.அருகில் இருந்த குப்பைத் தொட்டியைக் காட்டி அதற்குள் அதைப் போடுமாறு கூறினார்.அவ்வாறே செய்தார்.

மைத்திரிக்கு ஆதரவு வழங்காது மஹிந்தவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மு.கா எடுக்க வேண்டும் என்ற பஷீரின் கோரிக்கையை உள்ளடக்கிய கடிதம்தான் அது.

இப்போது ஊகித்துவிட்டீர்களா இறுதியாக அனுப்பப்பட்ட கடிதத்துக்கு என்ன நடந்திருக்கும் என்று?

5 comments:

  1. ஏதோ பக்கத்திலிருந்து எழுத்து பிழை பார்த்தாப்பொல பேசிரியல்

    ReplyDelete
  2. What is this Drama? just Ignore them all, there are so much to do for community and these so called leaders are fighting for silly things since long time ignoring entire community
    Just fooling us

    ReplyDelete
  3. So, u & Basheer...need Mahinda tht time...?
    Now everything is clear why Basheer doing this much...?

    ReplyDelete
  4. The Journalist M I Mubarak அவர்களே, தர்கா ரீதியாக பார்த்தாலும் கொடுத்த கடிதம் படிக்க படாமல் கிழித்து எறியப்பட்ட நிலையில் அதன் உள்ளடக்கம் எப்படி தெரிய வந்தது????? ஏன் இவ்வளவு காலதாமதித்தின் பின் இந்த செய்தி வருகிறது?? மஹிந்தவை ஆதரிக்குமாறு பஷீர் சேகு தாவுத் கூறிய விடயம் இந்த உலகுக்கே தெரிந்த விடயம். ஏன் ஹக்கீம் அவர்களே தபால் மூல வாக்களிப்பு நடாத்தும் மட்டும் மஹிந்தவுடன் டீல் பேசிவிட்டு முஸ்லீம் மக்களின் எழுட்சியை கண்டு ஆதரவளித்தனர். இப்படியான விடயங்களை கூறி தான் பதிலளிக்க வேண்டிய விடயத்தில் இருந்து சகோதரர் ஹக்கீம் அவர்கள் தப்பிக்க முடியாது. முடிந்தால் பஷீர் சேகு தாவூத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும் ( தாருஸ்ஸலாம் ). இன்னும் பல உள்ளன. தேசிய பட்டியல் எம்பி யாருக்கு?? ஹஸனலிவிடயம் என்னவானது?? ஹரிஸ் எம்பி கூறிய பணம் ( பத்து தாருஸ்ஸலாம் காட்டும் அளவு பொருளாதாரம், நாடுதலுதவிய ஒரு தேர்தலை நடத்தி முடிக்க தேவையான பொருளாதாரம் ), பொருளாதாரம் எப்படி கிடைத்தது?? புதிய அரசியல் சட்டம் திருத்தத்தில் ஹக்கீம் அவர்களின் கட்டுபாடும், அதை பற்றிய அறிவும், தெளிவும், நிலைப்பாடும் என்ன?? போன்றவைகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  5. The Journalist M I Mubarak அவர்களே, தர்கா ரீதியாக பார்த்தாலும் கொடுத்த கடிதம் படிக்க படாமல் கிழித்து எறியப்பட்ட நிலையில் அதன் உள்ளடக்கம் எப்படி தெரிய வந்தது????? ஏன் இவ்வளவு காலதாமதித்தின் பின் இந்த செய்தி வருகிறது?? மஹிந்தவை ஆதரிக்குமாறு பஷீர் சேகு தாவுத் கூறிய விடயம் இந்த உலகுக்கே தெரிந்த விடயம். ஏன் ஹக்கீம் அவர்களே தபால் மூல வாக்களிப்பு நடாத்தும் மட்டும் மஹிந்தவுடன் டீல் பேசிவிட்டு முஸ்லீம் மக்களின் எழுட்சியை கண்டு ஆதரவளித்தனர். இப்படியான விடயங்களை கூறி தான் பதிலளிக்க வேண்டிய விடயத்தில் இருந்து சகோதரர் ஹக்கீம் அவர்கள் தப்பிக்க முடியாது. முடிந்தால் பஷீர் சேகு தாவூத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும் ( தாருஸ்ஸலாம் ). இன்னும் பல உள்ளன. தேசிய பட்டியல் எம்பி யாருக்கு?? ஹஸனலிவிடயம் என்னவானது?? ஹரிஸ் எம்பி கூறிய பணம் ( பத்து தாருஸ்ஸலாம் காட்டும் அளவு பொருளாதாரம், நாடுதலுதவிய ஒரு தேர்தலை நடத்தி முடிக்க தேவையான பொருளாதாரம் ), பொருளாதாரம் எப்படி கிடைத்தது?? புதிய அரசியல் சட்டம் திருத்தத்தில் ஹக்கீம் அவர்களின் கட்டுபாடும், அதை பற்றிய அறிவும், தெளிவும், நிலைப்பாடும் என்ன?? போன்றவைகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.