Header Ads



மைத்திரிக்கு எதிராக பொலிஸ் விசாரணையா..? - பின்னணியில் மஹிந்த + பசில்

ஊழல், மோசடிகளுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுத்து வரும் நடவடிக்கையால் ராஜபக்ஷ ரெஜிமென்ட் ஆட்டம் கண்டு வருகிறது.

இந்நிலையில் ஜனாதிபதியை பலவீனப்படுத்த வேண்டிய அவசியம் மஹிந்த தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரி தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக உடைக்கும் சூழ்ச்சி நடவடிக்கையை மஹிந்த அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சதி நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மஹிந்த தரப்பினருக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முயற்சி செய்தால், பல ரகசியங்களை அம்பலப்படுத்துவேன். அதன் பயனாக மஹிந்த அணியினர் தெருவில் அலைய வேண்டிய நிலை ஏற்படும் என ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.

இதனை சற்றும் எதிர்பாரா ராஜபக்ஷ ரெஜிமென்ட் அதற்கு இணையாக மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் வெளிப்பாடாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாய அமைச்சராக செயற்பட்ட போது இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மஹாவலி அபிவிருத்தி திட்டத்தை மேம்படுத்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டதாகவும், அதற்காக அந்த நிறுவனங்களிடம் இலஞ்சம் கோரியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இவ்வாறான செய்தி வெளிவர உலகின் கெஸினோ அரசராக வர்ணிக்கப்படும் ஜேம்ஸ் பெக்கர் செயற்பட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமைய இவ்வாறு செயற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சதித்திட்டம் குறித்து மஹிந்தவின் மிரிஹான வீட்டில் வைத்து இந்த சதித்திட்டம் திட்டப்பட்டுள்ளது. இதன்போது தொலைபேசி வாயிலாக பெக்கரை தொடர்பு கொண்ட பசில் ராஜபக்ஷ தமது திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் கோரிக்கைய ஏற்றுக்கொண்ட ஜேம்ஸ் பெக்கர், அவுஸ்திரேலியாவின் பெடரல் பொலிஸாருடன் பேசி, இதற்கான நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

பெக்கரின் கோரிக்கைக்கு ஏற்ப இலஞ்ச குற்றச்சாட்டின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விசாரணை செய்யப் போவதாக பெடரல் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எனினும் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள ஜனாதிபதி மைத்திரி, சட்டமா அதிபர் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.