"மும்முறை மூன்று" தங்க வேட்டையை, வெற்றிகரமாக நிறைவேற்றிய உசைன் போல்ட்
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் , உசைன் போல்ட், ஜமைக்கா ஆண்கள் அணியின் 4X100 மீட்டர் தொடர் ஓட்ட அணிக்கு தலைமை தாங்கி, போட்டியில் ஜப்பான் அணியை வென்றதன் மூலம் தனது "மும்முறை மூன்று" தங்க வேட்டையை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டார்.
ஜப்பான் அணியினரைக் காட்டிலும் அதிகம்பீரமாக வெற்றிக்கோட்டைக் கடந்து அவர் இந்த சாதனையை நிலைநாட்டினார்.
ஜப்பான் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இந்த வெற்றியின் மூலம், மூன்று தொடர் ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொன்றிலும், மூன்று தங்கப்பதக்கங்களை போல்ட் இப்போது வென்றவராகிறார்.
பந்தயத்துக்குப் பிறகு, தனது ரசிகர்கள் மற்றும் புகைப்படக்காரர்களையும், அவர் தன்னுடைய பிரபலமான "மின்னல் வேக போல்ட்" என்ற பாணியில் போஸ் கொடுத்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.
இந்த சாதனையை நிகழ்த்தியதில் தான் பெற்ற மகிழ்ச்சியையும், பெருமையையும், நிம்மதியையும் அவர் வெளிப்படுத்தினார்.
பந்தயத்துக்கு முன்னதாக, தன்னுடைய சக ஓட்டப்பந்தய வீரர்களிடம், இந்தப் போட்டியில் தனக்காக அவர்கள் நன்றாக ஓடவில்லையென்றால். அவர்களை அடித்துத் துவைத்துவிடுவதாகக் கூறியதாக அவர் தெரிவித்தார்.
Well done Uasin!
ReplyDelete