மஹியங்கனை பௌத்த கொடி எரிப்பு - நீண்ட நாட்களுக்கு பின், முஸ்லிம்களுக்கு பிணை
-ARA.Fareel-
மஹியங்கனையில் பௌத்த கொடி எரிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 முஸ்லிம் இளைஞர்களையும் பதுளை நீதிவான் பிணையில் விடுவித்துள்ளார்.
மஹியங்கனை பன்சலையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றின் போது பௌத்த குருவொருவர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹியங்கனை பங்கரகம்மன தம்பகொல்ல பகுதியைச் சேர்ந்த 8 முஸ்லிம் இளைஞர்கள் பௌத்த கொடிகளை எரித்தமைக்கு எதிராக மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் முஸ்லிம் வீடுகளுக்குச் சென்று சம்பந்தபட்ட சந்தேகநபர்களான இளைஞர்களைத் தேடியதையடுத்து அவர்கள் பொலிஸில் ஆஜராகினர். பின்பு இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பௌத்த கொடி எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து பொதுபலசேனா அமைப்பு மஹியங்கனையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினையும் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் முஸ்லிம்களுக்கு சார்பாக செயற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
மஹியங்கனை பொலிஸார்.பங்கரகம்மன பள்ளிவாசல் மற்றும் மஹியங்னை பன்சலைக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அங்கு சுமுக நிலை நிலவுவதாகவும் பங்கரகம்மன ஜூம்ஆ பள்ளிவாசல் உப தலைவர் முஹ்மூத் தெரிவித்தார்.
After this try to think before you do any foolishness...!
ReplyDelete