Header Ads



ஷகீப் கொலையாளிகள் எங்கே..?

கொழும்பு,பம்­ப­லப்­பிட்டி, கொத்­த­லா­வல எவ­னியூ பகு­தியில் கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலைமானை படு­கொலை செய்த கொலையாளிகள் மாவ­னெல்லை பகு­தியில் தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.  

இந்நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய 20 பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

இந் நிலையில் நேற்று நண்­பகல் வரை ஏற்­க­னவே வெளிநாட்டுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்­டுள்ள ஐந்து வர்த்­த­கர்கள் உள்­ளிட்ட 8 பிர­பல வர்த்­த­கர்­களை பொலிசார் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர். 

அத்­துடன் அவர்­க­ளது சார­திகள் என நம்­பப்­படும் 8 பேர் உள்­ளிட்ட மொத்­த­மாக 50 பேருக்கும் அதி­க­மா­னோ­ரிடம் விசா­ரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்­துள்ள பொலிஸார், சந்­தேக நபரை துல்­லி­ய­மாக அடை­யாளம் கண்­டு­கொள்ள விரி­வான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

 அதன்­படி இது வரை சந்­தேக வல­யத்­துக்குள் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு வரும் 8 வர்த்­த­கர்­களும் கொலை இடம்­பெற்­றதாக நம்­பப்­படும் கடந்த 21 ஆம் திக­தி­யன்று எங்கு சென்­றார்கள், யாருடன் இருந்­தார்கள், யாருக்­கெல்லாம் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­னார்கள், அன்­றைய தினம் அவர்­க­ளது வாகனங்கள் எத்­தனை கிலோ மீற்­றர்கள் பய­ணித்­துள்­ளன உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து பொலிஸார் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

இதற்­காக குறித்த வர்த்­த­கர்­களின் சார­தி­க­ளிடம் வாக்கு மூலம் பெற்­றுள்ள விசா­ர­ணை­ அதிகாரிகள், வர்த்­த­கர்­களின் தொலை­பேசி வலை­ய­மைப்பை மையப்­ப­டுத்­தியும், கொழும்பு முதல் மாவ­னல்லை வரை­யி­லான ஏ 1 பிர­தான வீதியில் உள்ள அனைத்து சீ.சீ.ரீ.வி. கம­ராக்­களை ஆய்வு செய்தும் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்கவின் நேரடி மேற்­பார்­வையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் நிஸாந்த டி சொய்­ஸாவின் ஆலோ­ச­னைக்கு அமைய அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டி சில்­வாவின் கீழான விசா­ரணைக் குழுக்­களே இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

 இந் நிலையில் நேற்று வரை முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் இக்­கொ­லையின் பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­படும் ஒருவர் குறித்து பல தக­வல்கள் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ள­தா­கவும் அது தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் இ­டம்­பெ­று­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

அத்­துடன் வர்த்­தகர் சகீப் சுலை­மானின் படு­கொ­லை­யா­னது ஒரு ஒப்­பந்தக் கொலை­யாக இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் எனவும் அது தொடர்­பிலும் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள நிலையில், ஒப்­பந்த கொலை சந்­தேக நபர்கள் மாவ­னல்லை பகு­தியில் தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கலாம் எனும் கோணத்தில் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

இதனை விட கடந்த 23 ஆம் திகதி வர்த்­தகர் சகீபின் தந்­தைக்கு கேகாலை பகு­தியின் தனியார் தொலைத் தொடர்பு நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து அழைப்பை ஏற்­ப­டுத்தி 2 கோடி ரூபா கப்பம் கோரி­ய­வரை அடை­யாளம் காணவும் விசா­ர­ணைகள் துரிதப்படுத்தப்­பட்­டுள்­ளன.

இது­வ­ரை­யி­லான விசா­ர­ணையின் படி சகீப் சுலைமான் மிகத் திட்­ட­மி­டப்பட்டு படு­கொலை செய்­யப்பட்­டுள்­ள­மைக்­கான சாத்­தி­யங்கள் கூடு­த­லாக உள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

2016.08.21 அன்று கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நிலையில் மாவ­னல்லை பகு­தியில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட மொஹம்மட் சகீப் சுலை­மானின் படு­கொலை தொடர்பில் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் சந்­தேக நபர்கள் எனக் கருதி ஐவ­ருக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்கும் நிலையில் அவர்கள் வெளி நாட்­டுக்கு தப்பிச் செல்லத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமை­வா­கவே இந்த தடை உத்­த­ரவு பெறப்­பட்­டுள்­ளன.

 வெள்­ள­வத்தை பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் இம்ரான் மொஹம்மட் இக்பால், மொஹம்மட் சாதிர் பசீர், மொஹம்மட் இம்ரான் இக்பால், காலி வீதியைச் சேர்ந்த  மொய்ன் ஸுமர், தெமட்­ட­கொ­டையைச் சேர்ந்த  மொஹம்மட் சாலி மொஹம்மட் இஸ்மத் கான் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே இந்த வெளி­நாட்டுப் பயணத் தடை பெறப்­பட்­டுள்­ளது.

இவர்கள் இக்­கொலை மற்றும் கடத்­த­லுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்­களா என விசா­ரணை தொடரும் நிலையில்; அவர்கள் நாட்டை விட்டு தப்­பிச்­செல்ல முற்­பட்டால் அல்­லது விமான நிலையம் வந்தால் அவர்­க­ளது கடவுச் சீட்­டுக்­களை பறித்து அது தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு அறி­விக்க தேசிய உளவுப் பிரிவின் பணிப்­பா­ள­ருக்கும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு கட்­டுப்­பாட்­டா­ள­ருக்கும் நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

கடந்த வாரம் பிறப்­பிக்­கப்பட்ட இந்த உத்­த­ர­வுக்கு உள்­ளான வர்த்­த­கர்கள் கொலை செய்­யப்பட்ட வர்த்­த­கரின் தாய் வழி உறவி­னர்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக விசா­ர­ணைக்கு முகம் கொடுத்­துள்ள ஏனைய மூன்று வர்த்­த­கர்­களும் சகீ­புடன் நெருக்­க­மாக பழ­கி­ய­வர்கள் எனவும்; சகீ­புக்கு நெருக்­க­மாக இருந்த அவ­ரது எதி­ரியே அவரைக் கொலை செய்­தி­ருக்க வேண்டும் எனவும் விசா­ர­ணை­யா­ளர்கள் சந்­தே­கிக்­கின்­றனர்.

இந்­தோ­னே­ஷியா, சீனா ஆகிய நாடு­களில் இருந்து துணி­ம­ணி­களை தனது தந்­தை­யுடன் சேர்ந்து இறக்­கு­மதி செய்யும்  கோடீஸ்­வர வர்த்­த­க­ரான மொஹம்மட் சகீப் சுலைமான் (வயது 29) கடந்த 21 ஆம் திகதி  வெள்­ள­வத்தை பகு­தியில் இடம்­பெற்ற திரு­மண நிகழ்­வொன்றில் பங்­கேற்­றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் நண்­பர்­க­ளுடன் கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள உணவகத்தில்  தேனீர் அருத்­தி­யுள்ளார்.

அதன் பிறகே மனை­விக்கு சாப்­பாடும் எடுத்­துக்­கொண்டு அவர் அங்­கி­ருந்து வீடு நோக்கி சென்­றுள்ளார். வீட்டின் அருகே சென்­றுள்ள அவர் வீட்டின் பிர­தான வாயிலை திறக்­கு­மாறு மனை­விக்கு தொலை­பே­சியில் தனது காருக்குள் இருந்­த­வாறே அறி­வித்­துள்ளார்.
இதன்­போது வீட்­டுக்குள் இருந்து வெளியே வந்­துள்ள மனைவி பிர­தான வாயிலை திறந்­துள்ளார்.

திறக்கும் போது, காரில் இருந்த தனது கண­வ­ரை வேனொன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் கடத்­திக்­கொண்டு செல்­வதை தான் கண்­ட­தாக மனைவி  பம்­ப­ல­பிட்டி பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில்  தெரி­வித்­துள்ளார்.

 இந்­நி­லையில் பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தனக்கு 4 மற்றும் 3 கோடி ரூபா மோசடி செய்த இருவர் குறித்து  வர்த்­தகர் சகீப் குற்றப் புல­னாய்வு பிரி­விலும் 45 மற்றும் 35 இலட்சம் ரூபா மோசடி செய்­த­வர்கள் குறித்து மோசடி தடுப்புப் பிரி­விலும் முறைப்­பாடு செய்­துள்­ளமை தெரி­ய­வந்­தது. இந்­நி­லையில் வர்த்­த­க­ருக்கு மோசடி செய்தோர் அதி­லி­ருந்து தப்­பிக்­கொள்ள  இந்தக் கடத்­தலை முன்­னெ­டுத்­த­னரா என்ற கோணத்­திலும் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

வர்த்­த­க­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்­ட­வர்கள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்ள நிலையில் பம்­ப­லப்­பிட்டி பகு­தியின் பல சீ.சி.ரி.வி. கம­ராக்­களும் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  அத்­துடன் வர்த்­தகர் சகீபின் உற­வி­னர்கள் நண்­பர்கள் என பல­ரி­டமும் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். இந் நிலை­யி­லேயே ப­ல­ப்பிட்டி பகு­தியின் பல சீ.சி.ரி.வி. கம­ராக்­களும் சோதனைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

அத்­துடன் வர்த்­தகர் சகீபின் உற­வி­னர்கள் நண்­பர்கள் எனப் பல­ரி­டமும் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். இந் நிலை­யி­லேயே சகீப்பை விடு­விக்க மர்ம நபர் ஒருவர் 2 கோடி ரூபா கப்பம் கோரி­ய­மையும் அந்த கோரிக்கை கேகாலை தனியார் தொலைத்­தொ­டர்பு நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து விடுக்­கப்­பட்­ட­மையும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் தொடர்ந்த நிலை­யி­லேயே  சகீபின் சடலம் மாவ­னெல்லை - ஹெம்­மாத்­த­கம பிர­தான வீதியின் உக்­கு­லே­கம பள்­ளத்­தாக்கில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களைத் தேடிய விசாரணைகள் தொடர்கின்றன. 

-விடிவெள்ளி  MFM.Fazeer-

No comments

Powered by Blogger.