ஒலுவில் மக்களுக்கு, மகிழ்ச்சிகரமான செய்தி -அமைச்சரவையும் இன்று பச்சைக்கொடி காட்டியது
-உமர் அலி-
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கினங்க துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று (31) புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒலுவில் கடலரிப்பு விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்திருந்தார். இதற்கமைவாக ஒலுவில் கடலரிப்பை தடுக்கு முகமாக தடுப்புக் கற்களை போடுவதற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இச்செய்தி வெளியானதும் ஒலுவில் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட மு.கா எம்.பிக்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
ஒலுவில் கடலரிப்பு விவகாரம் கடந்த மாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு ஒலுவில் மக்களால் முன் கொண்டு செல்லப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்.
இதனை தீர்த்து வைக்கும் முகமாக மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம், மு.கா எம்.பிக்கள் உள்ளிட்ட துறைமுக அதிகார சபை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சகிதம் ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்து நிலைமையை நேரில் பார்வையிட்டு அம்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இவ்விடயம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைமுக அமைச்சர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்து வைக்கப்படும் என வாக்குறுதியளித்துச் சென்றனர்.
இதனைத் தொடர்;ந்து மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட மு.காவின் அம்பாறை மாவட்ட பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், எம்.ஐ.எம்.மன்சூர் எம்.பி சகிதம் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோரை சந்தித்து மேற்படி விடயம் குறித்து விரிவாக பேசியதுடன் இவ்விடயம் மிக அவசரமாக செய்ய வேண்டும் என அழுத்தமும் கொடுத்தனர்.
இதற்கமைவாக துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அண்மையில் துறைமுக அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரிகளை ஒலுவிலுக்கு அனுப்பி வைத்து கடலரிப்பு தொடர்பான அறிக்கையினை உடன் சமர்ப்பிக்குமாறு பணித்ததற்கமைவாக அவர்கள் நேரடியாக ஒலுவிலுக்கு வந்து பார்வையிட்டு அதற்கான அறிக்கைகளை அமைச்சரிடம் கையளித்தனர்.
இதன் நிமித்தம் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொண்டமையாகும்.
ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தை அல்லாஹ்வுக்கு அடுத்த படியாக தலைவர் ஹக்கீமினால் மாத்திரமே செய்துதர முடியும் என்று சொன்ன ஒலுவில் ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் ஜெயித்துவிட்டார்.
எவன்டா அல்லாஹ்வுக்கு அடுத்தபடி
ReplyDelete"ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தை அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக தலைவர் ஹக்கீமினால் மாத்திரமே செய்து தர முடியும் " என்றுசொன்ன ஒலுவில் ஜம்மிய்யதுல் உலமா சபைத்தலைவர் ஜெயித்துவிட்டார்.
ReplyDeleteஇஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் வெற்றியென்பது மக்கா வெற்றியே.அந்த வெற்றியின் போதே "இஸ்லாத்தில் மக்கள் சாரை சாரையாக இணையும்போது வல்ல அல்லாஹ்வை துதித்து பாவமன்னிப்பு கோருவீராக" என்றே குர்ஆன் வழிகாட்டுகிறது.