"ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் திருமணம்"
தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் திருமணம் செய்துகொண்டுள்ளது.
இந்த திருமணத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காகவே சிலர் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அண்மையில் அமைப்பாளர்கள் பலர் நீக்கப்பட்டு, புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.mதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் சிலரின் பதவி நீக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அந்த கட்சியின் பிரபலமான மற்றும் அர்ப்பணிப்பு மிக்கவர்களை கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.
அத்துடன், கட்சிக்கான வாக்குகளை அதிகரிப்பதில் அமைப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் நீக்கப்பட்டமையானது கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் அதேவேளை, குறித்த அனைவரும் கட்சியின் வளர்ச்சிக்காக பாரியளவு பங்காற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும், தேசிய அரசாங்கம் எனும் பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் சுதந்திரக் கட்சியினர் இடம்பெற்றதை எதிர்த்த காரணத்திற்காக அமைப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment