Header Ads



வாய் தவறிவிட்டேன்

கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும், அது வாய்தவறி 2 கோடியாக மாறி விட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்த போது அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த வந்து விட்டதாக குறிப்பிட்டார்.

இதுபோல தான் தனக்கும் வார்த்தை தவறி விட்டதாக கீதா குறிப்பிட்டுள்ளார்.

இன்று -08- காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்றைய பாதயாத்திரையின் போது அமைச்சர் ஒருவர் ஹெலிகொப்டரில் இருந்து பார்த்த போது 100 பேர் கலந்து கொண்டிருந்ததாகவும், இன்னொரு அமைச்சர் குறிப்பிட்டார் 3000 பேர் வந்ததாகவும், அவர்கள் அவ்வாறு கூறும் போது, தான் கோடி என்று கூறியதில் தவறு இல்லை என்றும் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களை பெரிதுபடுத்தி வற் வரி சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயல்வதாகவும், மக்களை அழிக்க நினைக்கும் குறித்த வற் வரி அதிகரிப்பை நீதிமன்றம் தடுத்து நிறுத்தினாலும்,அரசாங்கம் அதை நிறைவேற்ற துடிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பாதயாத்திரையில் கலந்து கொண்டு பாட்டுப் பாடி, ஆடியவர்கள் தொடர்பில் பிரச்சினைகளை ஐக்கிய தேசிய கட்சி பெரிதுபடுத்த வேண்டாம் எனவும், இது கணக்கெடுப்பு நிகழ்வு இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பாதயாத்திரை முடிந்து பல நாட்கள் கடந்தும் ஐக்கிய தேசிய கட்சி இன்னும் அதனை தோளில் தூக்கிக்கொண்டு நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. குடிகாரி பேச்சு விடிஞ்சா போச்சு

    ReplyDelete

Powered by Blogger.