முஸ்லிம் கடைகளை, பகிஷ்கரிக்கும் சிங்களவர்கள் - ஞானசாரரும் தீ பற்றவைக்க விரைகிறான்
குருநாகல், வாரியபொல நிருபர்கள் குருநாகல் மாவட்டத்திலுள்ள மும்மானை கிராமத்தில் வர்த்தகம் செய்யும் முஸ்லிம்களின் கடைகளை பகிஷ்கரிக்குமாறும் அவற்றில் பொருட்களை கொள்வனவு செய்யக் கூடாது எனவும் 'பொது தேபல சுரகிமே ஜனதா எகமுதுவ' எனும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அப் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மும்மானை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியை அப் பிரதேசத்தின் பொதுக் காணியாக மாற்றியமைக்குமாறு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கடந்த பல மாதங்களாக கோரிக்கைகளை விடுத்து வருவதாகவும் இதற்கு பாடசாலை நிர்வாகம் சம்மதம் தெரிவிக்காததையடுத்தே அப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை பகிஷ்கரிக்கும் நடவடிக்கைகயை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் குருநாகல், தம்பதெனிய, மும்மானை மஸ்ஜிதுர் ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசலினால் வெ ளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பள தேர்தல் தொகுதியில் கிரியுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மும்மானை கிராமம் அமைந்துள்ளது.
மும்மானை கனிஷ்ட முஸ்லிம் வித்தியாலயம் 1962 ஆம் ஆண்டு இப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடிக் காணியில் அமைக்கப்பட்டது. 1970 ஆண்டு பிரதேச தனவந்தர் ஒருவர் இப் பாடசாலைக்கென ஒரு ஏக்கர் காணியை அன்பளிப்பாக வழங்கினார். 1978 ஆம் ஆண்டு இக் காணியை அரசுடைமையாக சுவீகரித்து பாடசாலைக்குச் சொந்தமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுவரை முழுமையாக முற்றுப் பெறவில்லை.
இருந்த போதிலும் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இக் காணி பாடசாலை விளையாட்டு மைதானமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் மும்மானை மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இன குழுவொன்று பாடசாலைக்குரிய மைதான காணியை பொதுக் காணியாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்கு பாடசாலை நிர்வாகமும் பிரதேச முஸ்லிம்களும் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்தே அப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரசாரங்களை தூண்டிவிட்டுள்ளதுடன் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெரும்பான்மை இனத்தவர்களை வீடு தேடிச் சென்று அச்சுறுத்துகின்றனர்.
இது தொடர்பில் பாடசாலை மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் பிரதேச அரசியல்வாதிகளிடம் முறையிட்டுள்ள போதிலும் எவரும் இது விடயத்தில் அக்கறையுடன் செயற்பட முன்வரவில்லை என்பதையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் மும்மானை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் அதிபர் எம்.சுஹைப் விடிவெள்ளிக்கு கருத்து வெளியிடுகையில், குறித்த மைதானக் காணி பாடசாலைக்குச் சொந்தமானது என்பதற்கான சகல ஆதாரங்களும் ஆவணங்களும் எம்மிடம் உண்டு.
இதனை அரசுடைமையாக்கி பாடசாலைக்கு கையளிப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா 1978 இல் மேற்கொண்டார்.
1979 இல் நில அளவையும் செய்யப்பட்டது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய 9 கட்ட வேலைகளில் 7 வேலைகள் முடிந்துவிட்டன.
இந் நிலையில்தான் தற்போது சில சக்திகள் பாடசாலைக்குச் சொந்தமான காணியை பொதுக் காணியாக மாற்றுமாறு கோரி வருகின்றன. இந்த விவகாரத்தை அரசாங்க அதிகாரிகள் மூலமாக சுமுகமாக தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
இதற்கிடையில் குறித்த பகுதிக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வருகை தரவுள்ளதாக மும்மான பிரதேசமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பாடசாலை மைதானக் காணி விவகாரத்தின் பின்னணியில் நின்று செயற்படுகின்ற, முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களை பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்ற 'பொது தேபல சுரகிமே ஜனதா எகமுதுவ' எனும் அமைப்பே இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.ஞானசார தேரர் குறித்த பகுதிக்கு வருகை தருவதானது அங்கு மேலும் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கும் என பிரதேச முஸ்லிம்கள் அச்சம் வெ ளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச பொலிஸ் நிலையத்திலும் முஸ்லிம்கள் சார்பில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Where are our political leaders,?
ReplyDeleteஉரிய நேரத்தில் வருவார்கள்,ஆனால் வரமாட்டார்கள்!
ReplyDeleteஅவனுகளுக்கு அது ஒன்றும் தெரியாது
ReplyDeleteOur leader varukirar varukirar
ReplyDeleteMr. Mohammed, if you through a piece of bone toword politician then thay would come on the road.
ReplyDelete