சமரசத்திற்கு சென்ற உள்துறை துணை, அமைச்சர் அடித்துக்கொலை
பொலிவிய நாட்டில் சுரங்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை சமரசம் செய்ய சென்ற துணை உள்துறை அமைச்சர் Rodolfo Illanes கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிவிய நாட்டின் தலைநகரான லா பாஸின் கிழக்கில் உள்ள பண்டுரோ என்ற இடத்தில் புதிய சுரங்க சட்டம் தொடர்பாக சுரங்க தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த சென்ற துணை உள்துறை அமைச்சர் Rodolfo Illanes போராட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நேரில் சென்றார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்கள் துணை உள்துறை அமைச்சரை கடத்தி கொலை செய்துள்ளனர்.
இந்த கொலையை வன்மையாக கண்டித்துள்ள பொலிவிய அரசு, இந்த சம்பவத்தை மிருகத்தனமான மற்றும் கோழைத்தனமான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ரேய்மி பெரெய்ரா கூறுகையில், கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலிவிய சட்டங்களை மாற்றக்கோரி சுரங்கத் தொழிலாளர்களால் இந்த வார ஆரம்பம் முதலே மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் பொலிசாரின் அடக்குமுறையால் இரு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்தே சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் வன்முறையை நோக்கியதாக அமைந்திருப்பதாகவும், இதன் காரணமாக பொலிவியாவின் அமைதி கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.
Post a Comment