மஹிந்தவின் பையை, சோதனையிடுவது தவறு - சிரித்த முகத்துடன் ரணில்
தேசிய சேவை சங்கத்திற்கு சொந்தமான புகாரி ஹோட்டலின் பிரதான அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில், கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறிகொத்த கட்சி தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பம் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நிதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் இராஜினாமா செய்துக் கொண்டுள்ளார் அல்லவா, அந்த அதிகாரிகள் மாபியாக்களுக்கு அடிப்பணிவது தவறு என பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடம் அமைச்சர் தயா கமகே கூறியிருந்தார்.
நான் பிரதமரிடம் இது குறித்து பேசினேன். நாங்கள் அதிகாரிகளுக்கு அடிபணிய கூடாது. இந்த அதிகாரிகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் துறைமுகங்கள் போன்ற இடத்தில் ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டார்கள். அவற்றில் மோசடிகள் அதிகமாகியுள்ளது. அதனால் இவர்கள் இராஜினாமா செய்துக் கொண்டனர். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. நாங்கள் புதிதாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வருவோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
இதன்போது மோசடிக்காரர்களுக்கு இடம் கொடுக்கும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பிலான யோசனைக்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகளை உள்ளடக்கியமை நல்லது. தற்போது ஒரு குழுவினர் இதற்கு எதிராக கூச்சலிடுகின்றார்கள். கடத்தல் சம்பவங்களுக்கு இராணுவத்தினரும் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் கூறுவது உலகத்திற்கு தெரியவரும். அது இராணுவத்தினருக்கு ஆபத்து என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது, மஹிந்த வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் வரும் போது அவரின் பைகள் ஏன் சோதனையிடப்படுவதில்லை என ரஞ்சன் வினவியுள்ளார்.
மஹிந்த வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் நாட்டிற்கு வரும் போது பைகளில் பணம் கொண்டு வருவதாக கடந்த நாட்களில் ரஞ்சன் குறிப்பிட்டு வந்தார். எனினும் ரஞ்சனின் கருத்திற்கு பலரிடம் இருந்து சிறப்பான பதில் ஒன்றும் கிடைக்கவில்லை.
முன்னாள் தலைவரின் பையை சோதனையிடுவது தவறு. நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவர் பண தூய்மையாக்கல் செய்த பணத்தை கொண்டு வருகின்றார் என்பதனை நான் நினைப்பது எவ்வாறு? இந்த நாட்டு பணம் வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றால் தான் எங்களுக்கு நஷ்டம். எனினும் வெளிநாடுகளில் ஏதாவது ஒரு பணத்தை கொண்டு வருவது நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மையான விடயம் என சிரித்த முகத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment