"போக்கிமோன் கோ" விளையாடாதீர்கள் - இஸ்லாமிய அறிஞர்கள் பத்வா
உலக நாடுகளில் பிரபலம் அடைந்துவரும் 'போக்கிமோன் கோ' விளையாட்டுக்கு மலேசிய மக்கள் இடமளிக்ககூடாது என இஸ்லாமிய மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இல்லாத கதாபாத்திரங்களை இருப்பதுபோல் மாயமாக சித்தரித்து, செல்போன் மூலம் தேட வைக்கும் 'போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் விளையாட்டுக்கு மலேசியா நாட்டிலுள்ள இஸ்லாமிய மத அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதேமாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் 'போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.
ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் இந்த ரியாலிட்டி கேமை ஆன் செய்தவுடன் மொபைல் போனின் ஜிபிஎஸ் உடன் இணைந்து விடும். நாம் நிஜத்தில் நகர்ந்தால் அந்த கேமில் நம்முடைய கேரக்டரும் நகரும். சில இடைவெளியில் ‘மான்ஸ்டர்கள்’ எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாக காண்பிக்கும். அந்த இடத்திற்கு நாம் நடந்து சென்றால் அவற்றை பிடிக்க முடியும். இப்படித் தான் இதை விளையாட வேண்டும்.
விளையாடும் அனைவரும் அந்த கற்பனை உலகிற்கு அழைத்து செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த போக்கிமான் கோ.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆப்ஸ் ஸ்டோர்களில் கிடைக்கும் 'போக்கிமோன் கோ’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த 'போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் விளையாட்டுக்கு மலேசியா நாட்டிலுள்ள இஸ்லாமிய மத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போக்கிமான் கோ மற்றும் அனைத்து போக்கிமான் கதாபத்திரங்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மலேசிய நாட்டின் மூத்த இஸ்லாமிய மத தலைவர்களில் ஒருவரான ஜுல்கிப்லி முஹம்மது அல் பக்ரி வலியுறுத்தியுள்ளார்.
சக்திகளையும், தெய்வங்களையும் தேடுவது போல் அமைந்துள்ள இந்த விளையாட்டு சூதாட்டம் போன்றதாகும் என மூத்த அறிஞர்களை கொண்ட இஸ்லாமிய சட்ட ஆலோசனை கமிட்டி தெரிவித்துள்ளதால் இந்த விளையாட்டை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் போக்கிமான் கோ இன்னும் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment