யாழ்ப்பாணத்தில் இப்படியும் நடந்தது
எட்டு அடி நீளமான ராஜநாகத்திடமிருந்து எஜமானின் உயிரைக் காப்பாற்றவதற்காக நாயொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவமொன்று நேற்று யாழ்.கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் யாழில், நேற்று மாலை 5.00 மணியளவில் விளையாட்டரங்கு ஒழுங்கை ஜி.பி.எஸ் வீதி, கல்வியங்காடு எனும் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி வீட்டில் வசிக்கும் செல்வரட்ணம் பிரசாந்த் என்பவர் அல்சேசன் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
பிரஸ்தாப நாய் தினந்தோறும் அவருடனே அருகிலிருந்து சாப்பிடுவதும் உறங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று குறித்த வீட்டின் பின் வளவுக்குள் ராஜநாகம் ஒன்று பிரவேசித்துள்ளது.
நாகம் வந்திருப்பதனை அவதானித்த நாய், எஜமான் முன் குரைத்து அவரை விழிப்படையச் செய்துள்ளது.
நாயின் அடையாளப்படுத்தலுடன் வீட்டின் பின்பகுதிக்குள் சென்ற போது அங்கு மூலையில் ஏதோ வொன்று மறைந்துள்ளதை அவதானித்த நபர் அது என்னவென கண்டறிய தடியை அங்கு நீட்டியுள்ளார்.
இதன்போது வெகுண்டெழுந்த சுமார் எட்டு அடி நீளமான ராஜநாகம் அவரை கொத்த முயன்றுள்ளது.
உடனே விரைந்து செயற்பட்ட நாய் ராஜநாகத்தை தன்வாயால் இறுக கெளவியபடி அவ்விடத்தை விட்டு விரைவாக சென்று எஜமானின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
நாய்க்கும் ராஜநாகத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நாகத்தின் விஷப்பல் தாக்கி காலில் காயமடைந்த நாய் உடனடியாக சிகிச்சைக்காக மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.00 மணியளவில் நாய் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
நாயுடனான மோதலில் பலவீனமடைந்த ராஜநாகமானது அயலவர்களின் உதவியுடன் வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டு இரும்புக்கூட்டில் அடைக்கப்பட்டது.
இதேவேளை எஜமானின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு மரியாதை செய்வதற்காக நாயின் இறுதிச் சடங்கானது இன்றைய தினம் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் பிடிபட்ட ராஜநாகத்தையும் உயிரிழந்த அல்சேசன் நாயையும் அப்பகுதி மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாய் என்பது இஸ்லாத்தில் நஜீசான பிராணி ஆகும். ஒரு முஸ்லிம் நாயை விட்டிற்குள் அனுமதிக்கவே முடியாது. ஆகவே இது இஸ்லாத்திற்கு பொருத்தமற்ற செய்தி. அல்லாஹ்வுக்காக இந்த மாதிரியான செய்திகளை பதிவிட வேண்டாம். இதன் காரணமாக முஸ்லிம்களும் நாய் வளர்க்க வேண்டும் என்றோ, அல்லது இஸ்லாம் தடைசெய்துள்ள நஜீசான நாயை வளர்ப்பது சரியான செயல் என்ரோ சிந்திக்க மக்கள் தலைப்பபடுவார்கள்.
ReplyDeleteவிஷயம் தெரியாமல் பதிவிட வேண்டாம் , நாய் வளர்ப்பதற்கு அனுமதி இஸ்லாத்தில் உண்டு, ஆனால் அதை 40 அடி தூரத்தில் தான் வளர்ககவேண்டும். மேலும் அந்த எஜமான் ஒரு முஸ்லிம் என்று கூறப்படவில்லை. இந்த செய்தியை பதிய முடியாது என்றால் அரசியல் சாக்கடைகளை பதியலாமா? பாலியல் பலாத்காரம் , பன்றி பற்றிய செய்திகளை பதயலாமா?
Deleteதயவு செய்து இஸ்லாத்தை ஒரு முட்டாளின் மார்க்கம் போல் சித்தரிக்க முயலவேண்டாம்.
நாயின் ஈரமான பாகங்கள் தான் நஜீஸ் ஆகும்.
i wonder no king cobra is in SL
ReplyDeleteநாய்க்கு மரியாதையா
ReplyDeleteசொன்ன விடயத்தை புரியாமல் அவசரப் பட்டு பேசுகின்றீர்கள். செய்தியை முழுமையாக வாசியுங்கள். நாய் அருகிலிருந்து சாப்பிடுவதும், உறங்குவதும் வழமையாகக் கொண்டுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளதே? 40 அடி தூரத்திற்கு அருகு என்று சொல்வதில்லையே?
ReplyDeleteஇஸ்லாத்தின் சட்டங்கள் மனித குலத்திற்கும் மொத்தமனவை, அவை முஸ்லிம்களுக்கு மட்டும் என்று குறுக்கிக் கொள்ள வேண்டாம். மொத்த மனித சமூகத்திற்கும் வழிகாட்டவே இந்த வேதமே தவிர, முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. ஆகவே நாயின் எஜமான் முஸ்லிமோ, இல்லையோ, ஒரே சட்டம்தான்.
ஒருவன் முஸ்லிம் இல்லை என்றால் அவன் திருடலாம், விபச்சாரம் செய்யலாம், பொய் சொல்லலாம் என்று அனுமதி கொடுக்க முடியுமா? இஸ்லாத்தின் சட்டங்கள் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் பொருந்தும்.
அல்லாஹ் நஜீசாக்கிய நாயை அருகில் வைத்துக் கொள்வதால் எந்த நன்மையையும் இல்லை, இந்த செய்தி அதற்கு முரணாக உள்ளது, புரிந்து கொள்ளுங்கள்.
@ Yasmin Lafir. நீங்கள் பதிவிட்ட முதல் பின்னனூட்டலை மீண்டும் வாசித்துப்பாருங்கள்.
ReplyDelete" இது இஸலாத்துக்கு முரணான செய்தி
அல்லது இஸ்லாம் தடை செய்துள்ள நஜீஸான நாயை வளர்ப்பது சரியான செயல் என்றோ மக்கள் சிந்திக்க தலைப்படுவார்கள்"
இப்பொழுது நீங்கள் கூறுங்கள் இஸ்லாத்தில் நாய் வளர்ப்பது பிழை என்று எங்காவது கூறப்பட்டுள்ளதா?
மாறாக இஸ்லாத்தில் நாய் வளர்க்க அனுமதி உண்டு.
மேலும் Hunting போகும் போது ( இலங்கையில் அரிது ஆனால் மேழைத்தேயம் , அரபு , ஆபிரிக்க நாடுகளில் முஸ்லிம்கள் போவார்கள் )
நாயை சிரு தூரத்தில் தான் கட்டி வைப்பார்கள். மற்றை மிருகங்களிடமிருந்து இரவில் தங்களை பாதுகாக்க.
இது இஸ்லாத்திற்கு புரம்பான செய்தி என்று எவ்வாறு கூற முடியும் ?
தயவு செய்து இதை ஒரு விதன்டாவதமாக பார்க்காமல், இஸ்லாத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்கவும்.
We learn every day, I may learn from you or you may learn from others but non Muslims will learn from both of us Muslims. So we have to enlighten the truth at the same time we have to brush up our knowledge too.