பதக்கங்களை கடிப்பது இதற்காகத்தான்..!
ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நம்மில் பலரும் அவதானித்துள்ளோம்.
தற்போது இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது.
இதற்கான பதிலை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக இருந்த டேவிட் வெலனஷ்கி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களை கடிப்பது வழக்கமாக மேற்கொள்ளபடுகின்றது.
இதற்காக ஒலிம்பிக் கட்டுபாடோ, சட்டமோ விதிக்கவில்லை.
இதற்கான காரணம் புகைப்படவியலாளர்கள் தங்கள் புகைப்படங்கள் சிறப்பாக இருக்க வேண்டும், அது மாத்திரமின்றி புகைப்படத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக பதக்கங்களை கடிப்பது போன்று பதக்கங்களை கடித்தவாறு போஸ் கொடுக்கச் சொல்கின்றனர்.
இதனை பின்பற்றியே தற்போது வரை ஒலிம்பிக் சம்பிரதாயமாக வீர, வீராங்கனைகள் பதக்கங்களை கடிப்பது போன்று போஸ் கொடுத்து வருகின்றனர்.
nonsense
ReplyDelete