Header Ads



நித்திரை விட்டு எழுந்த போது, ஓய்வுபெற வேண்டுமென நினைத்தேன் - தில்சான்

காலை நித்திரை விட்டு எழுந்த போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள நினைத்தேன் என நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரி.எம். தில்சான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்வது குறித்து அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நேற்று காலை நித்திரை விட்டு எழும் போது ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென தோன்றியது. அதன்படி நான் சர்வதேச கிரிக்ககெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்தேன்.

தம்புள்ள போட்டியுடன் ஒய்வு பெற வேண்டுமென நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் ஓர் நாள் காலையில் எழும்போது தான் தோன்றியது.

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு இளையவர் ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கருதினேன். நான் எனது மனைவி பெற்றோருடன் இது பற்றி பேசி தீர்மானம் ஒன்றை எடுத்தேன்.

தாய் நாட்டுக்காக நான் 18 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளேன். துடுப்பாட்ட வீரராக ஜொலிக்காத போது பந்து வீச்சின் ஊடாக அணிக்கு சேவை செய்துள்ளேன்.

அவ்வாறு இல்லையென்றால் சிறந்த பிடியெடுப்பு அல்லது களத்தடுப்பு என எதிலாவது அணிக்கு சேவையாற்ற முயற்சிப்பேன். போட்டியின் போது களத்தடுப்பில் 10 -15 ஓட்டங்களை தடுத்து நிறுத்தியிருக்கின்றேன்.

நான் ஆற்றிய சேவை தொடர்பில் திருப்தி அடைகின்றேன். கிரிக்கட் போட்டிகள் வெளி மாவட்டங்களில் நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என தில்சான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ம் திகதி தில்சான் தம்புள்ளையில் நடைபெறும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்கின்றார்.

No comments

Powered by Blogger.