ஜாகிர் நாயக், சட்டவிரோத நடவடிக்கையில் - மும்பை போலீஸ்
-தினத்தந்தி-
ஜாகிர் நாயக் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது போலீஸ் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறிஉள்ளார்.
ஜாகிர் நாயக் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது போலீஸ் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறிஉள்ளார்.
டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், மத பிரசாரகர் ஜாகிர் நாயக்கின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டதாக கூறியதால், அவருக்கு
நெருக்கடி முற்றியது. இவ்விவகாரத்தை இந்திய அரசிடம் எழுப்பிய வங்காளதேசம் ஜாகிர் நாயக்கின் ’பீஸ்’ டிவி மற்றும் பள்ளிகளுக்கு தடை விதித்தது. இதற்கிடையே மதபோதகர் ஜாகீர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை போலீஸ் கமிஷனருக்கு மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். மத்திய அரசும் விசாரணையை தொடங்கியது.
ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மும்பை போலீஸ் தனது அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது.
இந்நிலையில் மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஏ.என்.ஐ.க்கு அளித்து உள்ளபேட்டியில்,
“ஜாகிர் நாயக் தொடர்பான விசாரணை அறிக்கையை மும்பை காவல் துறையிடம் இருந்து மத்திய அரசு பெற்று உள்ளது. அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்று உள்ளது. ஜாகிர் நாயக் தலைமையில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிலவற்றில் அவருடைய பங்கும் உள்ளது. மராட்டிய அரசு அறிக்கையை ஆய்வு செய்து வருகிறது, அறிக்கையானது விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்படும்.

மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம்,” என்று கூறிஉள்ளார்.
குற்றம் இழைத்தால் தண்டனை கொடுக்க வேண்டியதுதானே, அதை ஏன் ஊடகங்களில் பிரஸ்தாபிக்க வேண்டிய தேவை? இது நீதிமன்றத்தில் அல்லவா முடிவு செய்ய வேண்டும், மாறாக dr. Zakir Nayak விஷயத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் தீர்ப்பு கொடுத்துவிடுகின்றன.
ReplyDelete