நாட்டில் அல்கைதா, ஐ.எஸ்., தலிபான் இல்லை - என்றாலும் அடிப்படைவாத அமைப்புக்கள் இருக்கின்றன - சந்திரிக்கா
2014 ஆம் ஆண்டு அளுத்கமவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக புத்திஜீவிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூறுகையில்,
அளுத்கம சம்பவம் போன்று நாட்டில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களின்போது அப்போது இருந்த அரசாங்கங்கள் அதனை கட்டுப்படுத்தாமல் அதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளன. பொலிஸாரும் பக்கச்சார்பாகவே நடந்துகொண்டுள்ளனர்.
ஆனால் நாட்டில் இருந்த அரசாங்கங்கள் தோல்வி கண்ட இரண்டு சந்தர்ப்பங்களாக 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அளுத்தகம சம்பவங்களை குறிப்பிடலாம். இந்த இரண்டு சம்பவங்களின்போதும் அன்று இருந்த ஆட்சியாளர்கள் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பின்னால் இருந்து செயற்பட்டுள்ளனர்.
மேலும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டு பிரசைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. ஆனால் மற்றும் 2014 சம்பவங்களில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது. அத்துடன் 2014/ 15 காலப்பகுதியில் முஸ்லிம்களின் பள்ளவாசல்கள் மற்றும் கடைகள் பாரியளவில் சேதத்துக்குள்ளாக்கப்பட்டமை சகலரும் அறிந்த விடயம். ஆனால் இந்தச் சம்பவங்களின் பின்னணியை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருந்தது.
அதேபோன்று எனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக சம்பவங்கள் நடந்தபோது அதனை 3 தினங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
எனது ஆட்சியின்போதும் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனை நாங்கள் பாரிய சம்பவங்களாக மாறாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம். இவ்வாறான சம்பவங்களின் போது அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் வட்டத்துக்குள் இருந்து வெளியேறி மக்களை பாதுகாக்க முன்வரவேண்டும்.
மேலும் நாட்டில் அல்கைதா, ஐ.எஸ்., தலிபான் போன்ற அமைப்புக்கள் இல்லை. என்றாலும் சிறுசிறு அடிப்படைவாத அமைப்புக்கள் இருக்கின்றன. அது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து இனங்களிலும் இருக்கின்றன. இலங்கையில் மாத்திரம் அல்ல அனைத்து நாடுகளிலும் அடிப்படைவாத அமைப்புக்கள் இருக்கின்றன. அத்துடன் 1957 ஆம் ஆண்டுக்கு பின்னரே அடிப்படைவாதிகள் நாட்டில் தோன்றினர். அதற்கு அரசாங்கங்களும் பின்னணியில் இருந்துள்ளன.
-விடிவெள்ளி எம்.ஆர்.எம்.வஸீம் -
-விடிவெள்ளி எம்.ஆர்.எம்.வஸீம் -
Good statment
ReplyDeleteஅம்மையாரின் கணிப்பின்படி இலங்கையில் முஸ்லிம்கள் 1957ம் ஆண்டின் பின்பேயே இஸ்லாமிய அடிப்படையில் வாழ ஆரம்பித்துள்ளனர்.
ReplyDeleteஅதற்கு அரசாங்கங்களும் பின்னணியில் இருந்துள்ளது நன்றிக்குரிய விடயம்!
2001 மாவனல்ல கலவரம் யாருடைய ஆட்சியல் நடந்தது? ஆட்சி அதிகாரம் இல்லாத போது தான் சிலருக்கு நல்லது கெட்டது விளங்குகின்றது
ReplyDelete