ஜனாதிபதி மைத்திரியின் இணையத்தில் ஊடுருவி, விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத் தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாலை இவ்வாறு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இளைஞர் என்ற குழுவொன்று இணையத்தை முடக்கி சிங்களத்தில் சில விடயங்களை இணையத்தில் பிரசுரித்துள்ளது.
அன்புற்குரிய ஜனாதிபதி அவர்களே!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை ஏப்ரல் மாதத்தில் நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வருத்தமளிக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் சிங்கள தமிழ் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதனால், குறித்த காலப்பகுதியில் பரீட்சை நடத்துவது வருத்தமளிக்கின்றது. எனவே இந்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யவும்.
மேலும் இலங்கை இணைய தளங்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் அல்லது சைபர் தாக்குதல்களை எதிர்நோக்க நேரிடும்.
உங்களால் நிலைமைகளை சமாளிக்க முடியாவிட்டால் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தவும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்தவும். பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவும். என இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இணைய தளம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment