"இரகசியங்களை வெளியிடப் போவதாக மைத்திரி கூறியது நகைப்புக்குரியது, அவரும் குற்றவாளியே"
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் இரகசியங்களை வெளியிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமையானது நகைப்புக்குரியது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகரவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த ஜனாதிபதியின் இந்த கதையின் மூலம் அவரும் குற்றவாளி எனக் கருத முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டிருந்தார்.
எவ்வாறாயினும் மாத்தறையில் நேற்று நடைபெற்ற அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி புதிய கட்சியை ஆரம்பிக்கும் நாளில், இதுவரை வெளியிடாது இரகசியமாக வைக்கப்பட்டுள்ள தகவல்களை வெளியிட போவதாக கூறியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினரின் குடும்பத்தினர் தொடர்பான இரகசியங்களை பற்றியே ஜனாதிபதி, சூசகமாக இதனை கூறியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் இரகசியங்களை வெளியிட போவதாக ஜனாதிபதி கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment